18 உணர்கின்ற அருளாளன் ட்கொண்டாய். நான் காலம் எளியேனுக்கு இப்பொழுது கிடைத்தது. நீ என்னை உனக்கு ஆள் அல்ல என்று சொல்லிப் பார்த்தேன். ஆனாலும் நமக்கிடையே உள்ள தொடர்பானது ஒருவரால் புதியதாக உண்டாக்கப்பட்டது அன்று: என்னுடைய முயற்சியினாலே உண்டானதும் அன்று; அப்படி இருந் தால் பிறராலேயோ என்னுடைய முயற்சியினாலேயோ மாற்றிக்கொள்ள முடியும். இந்தத் தொடர்பு உன்னாலே அமைந்தது. ஆதலால் நான் இப்பொழுது ஆள் அல்வேன் என்று சொன்னால் அந்தத் தொடர்பு முறிந்துவிடாது. உனக்கு ஆளாகிவிட்டு, இப்பொழுது அல்லேன் என்று சொல்லலாமா? பொருளைக் கடன் கொடுத்தவன் ஒருவன், அந்தப் பொருளை மீட்டுக்கொள்ளும் வரைக்கும் எப்போதும் அதே நினைவாக இருப்பான். கடன் பெற்றுக்கொண்ட வர்கள் அத்தனை நினைவோடு இருப்பதில்லை. தங்களுடைய வறுமையினாலோ, பொல்லாத தன்மையினாலோ தாம் கடன் வாங்கினதை மறந்துவிடுவதும் உண்டு. மறவாமல் இருந்தாலும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று நினைப்ப தில்லை; கடன் கொடுத்தவனோ ஒவ்வொரு கணமும் அது எப்பொழுது திரும்பிவரும், திரும்பிவரும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறான். கடன் வாங்கினவன் இல்லை. என்று சொல்லிவிட்டாலும் கடன் கொடுத்தவன் தன் னுடைய உரிமையை வற்புறுத்துவான். இறைவனிடத் திலே அடிமை பூண்ட உயிர்கள் எல்லாம் அவனை மறந்துவிட்டாலும் இறைவன் அதை வற்புறுத்தும் சந் தர்ப்பம் சிலருக்கு நேர்கிறது. இறைவன் உன்னைத் தடுத்தாட்கொள்ளுவேன் என்று சுந்தரருக்கு முன்னாலே
பக்கம்:அருளாளன் 1954.pdf/27
Appearance