உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாய்க் கழிகின்றது. 23 செய்திகளெல்லாம் இறந்த காலத்தில் சொல்லும்படியாக அமைகின்றனவே ஒழிய, எதுவும் நிலையாகச் சொல்லும் படி இருப்பதில்லை. அவ்வாறு இறந்த காலத்தோடு சொல் லும் சொல்லாவது நிற்கிறதா என்றால், அந்தச் சொல்லும் கழிந்துவிடுகின்றது என்று சொல்கிறார். .. உலக வாழ்வின் நிலையாமையைத் தெரிந்துகொண்ட போது, நிலைத்த விலாசத்தோடு நிலையாக வாழ்கிறவன் யார் என்று ஆராய்ச்சி பண்ணத் தோன்றுகிறது. அந்த ஆராய்ச்சியிலே, யாரும் எளிதில் தட்டுப்படுவதில்லை. எல்லோரும் இப்படியே 'நல்வாயில் செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார் இறந்தார்' என்று சொல்லும்படி யாகவே, பிறப்பதும் வளர்வதும் வாழ்வதும் இறந்து படுவது மாகவே இருக்கிறார்கள். ஒருவரும் நிலையானவர் இல்லையா?- இறைவனுடைய அருள் துணை செய்யும் பொழுது, நீடு வாழ்வார் இன்னாரென்ற தெளிவு பிறக்கிறது. சில காலம் ஓரிடத்தில் வாழ்ந்து பின்பு மறைகின்ற வர்கள் மக்கள். அவர்கள் மலத்தோடு சம்பந்தம் உடை யவர்கள். அதனால்தான் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். அப்படி இன்றி நீடு உறையும் நின்மலன் ஒருவன் இருக் கிறான். அந்த நின்மலனைத் தெரிந்து கொள்ளும்படி அவனுக்கு ஓர் அடையாளம் இருக்கிறது. அவன் தன் தலையிலே நிலாவைத் தரும் வெண்மதியைச் சூடியிருக் கிறான். மதியை அறிவுக்கு அடையாளமாகச் சொல்வது வழக்கம். இறைவனுடைய திரு முடியிலே சந்திரன் ஒளிர் கின்றான் என்பது, அவன் எப்பொழுதும் ஞானம் நிறைந் தவன் என்பதைக் காட்டுகின்றது. அவன் சூடிய மதியே தேய்வதும் வளர்வதும் இன்றி எப்போதும் இளம் பிறை யாக இருக்கிறது. நிலாவை வீசும் வெள்ளை மதியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/32&oldid=1725534" இலிருந்து மீள்விக்கப்பட்டது