24 அருளாளன் சூடிய நின்மலனாகிய இறைவன். நீடு இறைவன் நீடு உறைகின்றான்; தன்னுடைய விலாசத்திலே நெடுங்காலமாக வாழ்கின்றான். கல்வாயில் செய்தார், நடந்தார். உடுத்தார்.இறந்தார் என்று சொல்வது போலின்றி, எப்பொழுதும் இருக்கிறான் என்று சொல்லும்படியாக உறைகிறான். அப்படி உறை கிறவனுக்கு, கைலாசம் என்று குறிப்பிட்டுச் சொல் லும் விலாசம் ஒன்று மாத்திரமல்ல; மதுரை, சிதம்பரம் என்று சில விலாசங்கள் மாத்திரமும் அல்ல; அவன் எத்தனையோ இடங்களில் ஒரே சமயத்தில் உறைகிறான். ஒரே இடத்தில் சில காலமே மக்கள் வாழ்கிறார்கள். பல பல இடங்களில் மாறி மாறிப் பிறக்கின் றன; பின்பு இறக்கின்றன. இறைவனோ எல்லா இடத்தை யும் தன்னுடைய விலாசமாகக் கொண்டு எல்லாக் காலத் திலும் இருக்கிறான். உயிர்கள் . எல்லா இடங்களிலும் இருந்தாலும் அவன் மக்களுக்கு அருள் செய்கின்ற சில இடங்களைப் பெரியோர்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அவற்றைத்தான் தலங்கள் என்று சொல்லுகிறோம். ஒரு விலாசத்தை மிகப் பெரியவர் கள் சொன்னால் அது நாலு பேருக்குத் தெரிகிற ஊர் ஆகி விடுகிறது. எல்லாக் கோயில்களிலும் இறைவன் எழுந் தருளியிருந்தாலும், பெரியோர்களாகிய சமயாசாரியர்கள் தங்களுடைய திருவாக்காகிய தேவாரம் முதலியவற்றாலே இறைவன் வாழும் இடம் இது என்று ஒன்றைச் சுட்டிக் காட்டும்பொழுது. அந்த இடத்துக்குப் பெருமை அதிகம் ஆகின்றது. பெரியவர்கள் எந்த இடத்திலே அதிகமாகப் பழகுகிறார்களோ அந்த வீட்டுக்கு மகிமை மிகுதியாக இருப்பதை உலகில் பார்க்கிறோம். சுந்தரமூர்த்தி நாயனாரைப் போன்ற பெரியவர்கள் ஏதேனும் ஒரு தலத்துக்குச் சென்று அங்கே எழுந்தருளி யிருக்கும் இறைவனைப் பணிந்து வழிபட்டுத் தம்முடைய
பக்கம்:அருளாளன் 1954.pdf/33
Appearance