உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுதல் ஒழியேன் 37. மற்றவர்கள் அஞ்சுவார்கள். அவர்கள் அஞ்சிச் செல்லச் செல்ல நீ அரிய பொருளாக விளங்குகிறாய். மற்றவர்க ளெல்லாம் அஞ்சும்படியும் அணுக இயலாதபடியும் உன் இயல்புகள் இருக்கின்றன. நான் உன்னுடைய உண்மைப் பெருமையை நன்கு உணர்ந்தவனாகையினால் இவற்றை யெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. பூண்நாண் ஆவதோர் அரவம்கண்டு அஞ்சேன். நீ சுடுகாட்டில் நடமாடுகிறாய். சுடுகாட்டுக்குச் சென் றால் வீட்டுக்குள்ளே நுழையும் வழக்கமில்லை; நீராடி விட்டுத்தான் வர வேண்டும். அது தவிர, சுடு காடு என்று சொன்னாலே மக்களுக்கு அச்சம் உண்டாகிறது. அங்கே பிணம், பேய், பூதம் ஆகியவை இருப்பதாக நினைக்கிறார்கள். நீ அங்கே ஆடல் செய்கின்றாய் என்பதை நன்கு தெரிந்து கொண்டுங்கூட உன்னிடத்தில் எனக்கு இகழ்ச்சியான எண்ணம் உண்டாகவில்லை. புறங்காட்டு ஆடல்கண்டு இகழேன். . பாம்பைக் கண்டு அஞ்சாமல் உன்னைக் குறுகினாலும், புறங் காட்டிலே எல்லாரும் இகழும்படியாக ஆடல் செய் கின்றாய் என்பதை நினையாமல் உன்னை அணுகினாலும் நீ என்னிடத்திலே அன்போடு இருப்பதில்லை. 'மற்றவர்கள் இவற்றைக் கண்டு இகழ்ந்து போய் விடுகிறார்கள். இவன் நம்மிடம் அன்போடு அணுகுகிறானே!' என்று எனக்குச் சற்றே கருணை செய்கிறாயா? இல்லை. பராமுகமாக இருக் கிறாய். அப்படிப் பேணாமல் இருந்தாலுங்கூட மறுபடியும் நான் உன்னை விடாமல் அணுகுகிறேன். உன்னுடைய பெருமையை நான் உணர்வேன். நான் உன்னை விட்டு விட்டால் அதனாலே உனக்கு யாதொரு குறையும் இல்லை: எனக்குத் தான் நஷ்டம். உன் பெரு மையையும் என் சிறுமையையும் தெளிவாக உணர்ந்திருக் உண்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/46&oldid=1725548" இலிருந்து மீள்விக்கப்பட்டது