உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அருளாளன் கிறேன். அது காரணமாகவே உன்னை எப்போதும் நினைக்கிறேன். நீ என்னைப் பேணாமல் புறக்கணித்தாலும் நின் பெருமையை நினைக்கின்றேன்; நின்னைக் குறை கூறு வது இல்லை. தமக்கு ஒருவர் நன்மை செய்தால் அவரைப் பெருமையை உடையவராக நினைப்பதும், தம்மைக் கவனிக் காமல் பராமுகமாக இருந்தால் அவர் பெருமையை மறந்து இழிவாக நினைப்பதும் உலகில் சிலருடைய இயல்புகள். உன் பெருமையை, அவ்வாறு இன்றி நீ என்னைக் கவனிக்கா விட்டாலும், நான் மறக்கமாட்டேன்; அதை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன். பக்தர்கள் தாம் மீட்டும் இந்த உலகில் பிறக்கும் பிறவி வராமல் இருப்பதற்காக உன்னைப் பணிகிறார்கள்; தியானிக்கிறார்கள். பிறவாமையாகிய பயனை அடைய அவர்களுடைய தியானம் பயன்படுகிறது. நான் உன் அருளால் பிறக்கமாட்டேன். இந்த உறுதி எனக்கு இருக் கிறது. பிறவாமைக்கு உரிய துணையாக இருப்பது உன் தியானம். 'அது கிடைத்த பிறகு இந்தத் துணை எதற்கு? என்று நான் எண்ணவில்லை. நான் இனிப் பிறக்கமாட் டேன் என்று தெரிந்தும் உன்னை மறக்கமாட்டேன். ஒரு பயனைக் கருதி நினைக்கும் நினைப்பு அல்ல இது. பிறவேன் ஆகிலும் மறவேன். உன்னைக் நான் எந்த எந்தத் தலங்களுக்கோ வந்து காண்கிறேன்; எங்கே எங்கே எப்படிக் காணவேண்டுமோ அப்படிக் காண முந்துகிறேன். ஆனால் நியோ என்னைக் கண் எடுத்தும் பார்க்கவில்லை. நீ பார்க்கவில்லை என்பத

  • பெற்றலும்பிறத் தேன்இனிப்பிற வாத தன்மைவந்

தெய்தினேன் " என்று வேறிடத்திலும் சொல்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/47&oldid=1725549" இலிருந்து மீள்விக்கப்பட்டது