40 அருளாளன் அந்தக் கட்டளைக்கு இணங்கி, உன்னுடைய அடியைப் பாடுதலை நான் ஒருநாளும் ஒழியவில்லை. நானேல் உன் அடி பாடுதல் ஒழியேன். . உலகத்தில் உள்ள பொருள்கள் நம்முடைய பொறி களை ஈர்க்கின்றன. அழகிய பொருள்கள் பல நம் கண் களைக் கவர்கின்றன. உலகத்துப் பொருள்களின் அழகிலே மயங்கின நமக்கு இறைவன் அழகனாக வந்தாலே கவர்ச்சி தோன்றாது. பாம்பை அணிந்துகொண்டு வந்தால் நாம் எங்கே காணப் போகிறோம்? அவனுடைய உண்மையான பெருமையை நன்கு உணர்ந்தவர்கள் அவனிடம் அன்பு கொள்வார்கள். அந்த அன்பினால், அவன் எப்படி இருந் தாலும் அவனைச் சாரவேண்டும் என்று நினைப்பார்கள். இதுதான் உண்மையான பக்தர்களுடைய இயல்பு. அழ கான பொருளைக் கண்டு அதனிடம் செல்வது குழந்தை களின் இயல்பு. உலகிலுள்ள எல்லோரும் கண்ணுக்கு அழகான பொருளைக் காதலிப்பார்கள். இறைவன் நல்ல பக்குவம் உடையவர்களுக்கு அருள் செய்யவேண்டும் என்ற நினைப்பினால் மக்களுடைய மனத் தைக் கவராத வகையில் கோலம் கொள்கிறான். தன் திரு மேனியிலே பாம்பை அணிந்திருக்கிறான். அதைக் கண்டு ஏமாந்து போகிறவர்கள் பலர். பாம்பு பூண்ட திரு மேனியை நத்திச் செல்பவர் யார்? எல்லாருக்கும் வாழ அழகான் இடங்களைக் கொடுத்துத் தான் மாத்திரம் எல்லாரும் பயப்படுகின்ற இடத்திலே குடி இருக்கிறான், இறைவன். யாவருக்கும் அழகான அணி களையெல்லாம் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் நஞ்சு டைய நாகத்தைப் புனைந்திருக்கிறான். மிகப் பெரியவர்கள் பலருக்குப் பயன்படுகிற பொருள்களைத் தாம் பயன்
பக்கம்:அருளாளன் 1954.pdf/49
Appearance