உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரன் அழிவும் குமாரன் அவதாரமும் றைவனைப் பற்றிய வரலாறுகள் பல புராணங் களில் காணப்படுகின்றன. அவற்றைப் படிக்கும்பொழுது கதைச் சுவை ஓரளவு இருந்தாலும் சில இடங்களில் உள் ளவை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகத் தோன்றும். புரா ணங்களை வெறுங்கதைகளாக மாத்திரம் படித்தால் அதில் நமக்குச் சுவை இராது. அவற்றின் ஊடே உள்ள தத்துவங்களைத் தெரிந்து கொண்டால் அப்பொழுதுதான் அவற்றின் பெருமை நன்கு விளங்கும். ஒரு தத்துவத்தை அப்படியே எடுத்துச் சொன்னால் அதில் சுவை தோன்றாது. அதைக் காவியமாகவோ" கதை யாகவோ புனைந்து சொன்னால் அதில் மனம் செல்லும்; ஆர்வம் உண்டாகும். புராணங்கள் சிறு குழந்தை களுக்குச் சொல்லும் கதைகளைப் போன்ற அமைப்பை உடையன; அதனால் அவற்றைச் சிசு சம்ஹிதை என்று வடமொழியில் சொல்வார்கள். 'சத்தியம் பேசு' என்று மாத்திரம் சொன்னால் அது கேட்கப் பிடிப்பதில்லை. அதை ஒரு கதையில் வைத்துச் சொன்னால் சுவை பிறக்கிறது. சத்தியத்துக்காகவே ஒருவன் வாழ்ந்து, எத்தனை தடை வந் தும் சத்தியத்தையே பேசினான் என்று அரிச்சந்திரன் கதை யைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்போம். சத்தியம் பேசு என்பது சாத்திரம். வேதமும் அப்படியே சொல்லு கிறது. அதையே அரிச்சந்திரன் கதையாகப் புராணம் சொல்கிறது. முதலிலே சொன்னது வெறும் தத்துவம்; பின்னாலே சொன்னது அந்தத் தத்துவத்தை உள்ளடக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/53&oldid=1725555" இலிருந்து மீள்விக்கப்பட்டது