உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறாக வந்து அருள்பவன் எம்பெருமான் நமக்கு வேண்டிய பொருள்களை யெல் லாம். அளித்திருக்கிறான்; உடலையும் உறுப்புக்களையும் வழங்கியிருக்கிறான். அவனுடைய கருணையை என்ன வென்று சொல்வது! ஆனால் நாம் அந்தக் கருணையைப் பல சமயங்களில் நினைப்பதில்லை. இறைவனை நாம் நினைக்கா மல் இருக்கிறோமே என்ற கவலைகூட நம்மிடம் தோன்று வதில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கிறவர். ஆனாலும் அவருக்குத் தாம் ஒவ்வொருகால் சரியாக இறைவனைச் சிந்திப்பதில்லை என்ற குறையே இருக்கிறது. அன்புடையவர்கள் இவ்வாறு எண் ணுவது இயல்பு. செல்வ வாழ்வில் உள்ள தாய் தன் குழந் தைக்கு எத்தனை வகையான ஆடை அணிகள் அணிந் தாலும் மன நிறைவு பெறமாட்டாள். சிறந்த அன்புடைய ஈண்பன் மற்றொருவனுக்கு எத்தனை உதவி புரிந்தாலும், 'நான் இன்னும் செய்ய முடியவில்லையே!" என்று வருந்து “வான். தம் கடமையில் குறை இருப்பதாக எண்ணுவது அன்பின் விசித்திரப் போக்குகளில் ஒன்று.சுந்தரர் இறைவனிடத்தில் முறுகிய அன்புடையவர். அவருக்குத் தம்முடைய அன்பு குறையுடையதாகத் தோன்றுகிறது. அவர் இறைவனிடம் தம் குறையையும், அதை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல் அருள்புரிவதையும் எண்ணிப் பாடுகிறார். இறைவனே! நான் எப்பொழுதும் உன்னை நினைக்க வேண்டியவன். உன்னுடைய திருவருளினாலே எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/63&oldid=1725565" இலிருந்து மீள்விக்கப்பட்டது