64 அருளாளன் காகத்தான் ஒறுக்கிறான். அதற்கு ஏதுவாயிருப்பது அவ னுடைய திருவருள் தான். ஒறுத்தாய் நின் அருளில். அரசியலில் இன்ன குற்றத்துக்கு இன்ன தண்டனை என்று சட்டம் இருக்கிறது. ஆனால் நாம் செய்கிற குற் றங்களுக்குத் தண்டனை இன்னது என்று எல்லை கிடையாது. காரணம் நாம் செய்யும் குற்றங்களுக்கே எல்லை இல்லை.ஏதோ ஓர் அளவாகக் குற்றம் செய்திருந் தால் அதற்குரிய தண்டனையையும் அளவாகக் கொடுக்க லாம். நாம் செய்கிற குற்றங்களோ மெலும் மேலும் எல்லை யற்று வளர்கின்றன. அப்படி வளர்கின்ற குற்றத்துக்கெல் லாம் தண்டனை அளிக்கவேண்டுமானால் நம்முடைய வாழ்வு முழுவதுமே துன்பப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும். இறைவன் மக்களுடைய வாழ்வு முழுமையும் துன்ப மயமாக வைப்பதில்லை. துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்வு. அடியார்களுக்குத் துன்பத்தையும் தரு கிறான்; இன்பத்தையும் தருகிறான். அவர்கள் இன்பம் வந்தாலும் ஆண்டவனுடைய அருள் என்று நினைக் கிறார்கள்; துன்பம் வந்தாலும் அருள் என்றே நினைக் கிறார்கள். மக்கள் செய்த அளவு கடந்த குற்றத்துக்காக அளவு கடந்து இறைவன் ஒறுக்கிறதில்லை. குற்றம் செய்ததற்காக ஓரளவு ஒறுக்கிறான்; அவ்வளவுதான். அவன் ஒறுக்கும் அளவைவிட ஒருக்காது விட்ட அளவே அதிகம். ஒறுப் பதைவிடப் பொறுப்பதே மிகுதி. மிகுதி. பல் குற்றங்களை அவன் கவனிப்பதில்லை. அதனால் நாம் உய்கிறோம். நாம் செய்கிற குன்றங்களுக்கெல்லாம் சரியானபடி அளவிட்டு. இன்ன குற்றத்திற்கு இன்ன தண்டனை என்று இறைவன் .
பக்கம்:அருளாளன் 1954.pdf/73
Appearance