உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் இனிமை 73 பின்பு கோயிலுக்குள்ளே சென்றார். இறைவனைத் தரிசித்தார். அவனைப் பார்ப்பதற்கு முன்னாலே எம்பெரு மாட்டியினுடைய நினைப்பு வந்தது. எம்பெருமாட்டிக்கு அங்கே கோல் வளையாள் என்று பெயர். அம்பிகையி னுடைய அழகிய திருவுருவத்திலே உள்ளத்தைப் பறி தொடுத்தார். அம்மையின் புன்முறுவல் பூத்த திருக் கோலம் அவருக்குத் தோற்றியது. ல . பெண்களின் அழகைச் சிறப்பிக்கும்போது அவர் களுடைய பற்களின் கூர்மையையும் செறிவையும் ஒளியை யும் எடுத்துச் சொல்வது புலர்களின் மரபு. உடம்பு முழுவதும் அழகு பரவியிருந்தாலும் முகம் ஒளியுடம் எழிலுடனும் விளங்கினால்தான் அழகி யென்று சொல்லு வார்கள். முகத்திற்கு ஒளி தருவது புன்னகை. பற்கள் அழகாக இருந்தாலன்றிப் புன்னகையில் எவ்வாறு அழகு அமையும்? இங்கே அம்பிகையின் முறுவல் பூத்த முகத்தின் அழகை அப் பெருமாட்டியின் பற்கள் மிகுதியாக்கு கின்றன. வெளுப்பாகவும் சிறியனவாகவும் அவை இருக்கின்றன; கூர்மையாகவும் உள்ளன. மயிலிறகின் அடிக் குருத்தைப் போன்ற வடிவமும் வெண்மையும் பெற்றவை அவை. குருந்து (குருத்து) ஆய முள் எயிற்றுக் கோல்வளை வாளைத் தரிசித்தார் சுந்தார். கையில் திரண்ட வளையை அணிந்திருக்கிறாள் பிராட்டி. அழகான காட்சிகள் உள்ள ஊரில் அழகிய முல்லைக் கொடி படர்ந்த கோயிலில் கோள் வளையாள் வீற்றிருந்தாள். அந்தப் பெருமாட்டியோடு எம்பெருமான் வீற்றிருந்தான். வேலி தோறும் கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியும் கருப்ப றியலூர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/82&oldid=1725584" இலிருந்து மீள்விக்கப்பட்டது