உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அருளாளன் குருந்தாய முள்எயிற்றுக் கோல்வளையா ளவளோடும் கொகுடிக் கோயில் இருந்தானை. (கருந்தாள - கரிய அடி மரத்தையுடைய குருந்துடமயிலிந கின் அடிக்குருத்து. முள் - முள்ளைப் போன்ற கூர்மை. கோல் வளை - திரட்சி பெற்ற வளை. கொகுடி - ஒரு வகை முல்லை.] கொ குடிக் கோயிலில் இருந்த பெருமானைத் தரிசித் தால் வினைகளெல்லாம் போய்விடுகின்றன. எம்பெருமா னுடைய தரிசனம் அன்பர்களுக்கு உள்ளத்து மாசையெல் லாம் கழுவி விடும். சுந்தரர் வினை போக எம்பெருமா னைத் தரிசித்தார். மூன்று கரணங்களையும் எம்பெருமானுடைய திருத் தொண்டிலே ஈடுபடுத்தியவர் சுந்தரமூர்த்தி சுவரமிகள்; இறைவனாலே படைக்கப் பெற்ற இயற்கை எழிலையெல் லாம் கண்டார். அந்த ஊருக்குள்ளே புகுந்தது முதற் கொண்டே அந்த அழகு அவர் கண்ணைக் கவர்ந்தது; கருத் தையும் கவர்ந்தது. உள்ளத்தில் இனிமை நிறைந்தது- வாழைப் பழத்திலே ஒழுகுகின்ற தேனைச் சுவைத்தால் நமக்கு எத்தனை இனிமை இருக்குமோ அதற்கு மேற்பட்ட இனிமை சுந்தரமூர்த்தி நாயனாருடைய உள்ளத்திலே நிரம்பிக் கிடந்தது. அந்த அழகுக் காட்சிகளைக் கண்டு பின் அம்பிகை யோடுள்ள இறைவனைப் பார்த்தார். அவர் கையெடுத்துக் கும்பிட்டார்; கீழே விழுந்து வண. ங்கி ர். அவர் உள்ளத்தில் இனிய உணர்ச்சி அப்பொழுது பொங்கியது. அழகான அழகான பாமாலை பாட ஆரம்பித்தார். நாமும் பாமாலை பாடுவோம்; வேறு யாரேனும் புலவர் பாடி வைத்ததைப் பாடுகிறோம். சுந்தரர் அப்படிக் கடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/83&oldid=1725585" இலிருந்து மீள்விக்கப்பட்டது