உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் இனிமை 77 அதை ஒருமுறை படிப்பதோடு நிறுத்தி விடுவது கூடாது. சிறந்த கவி எத்தனை முறை படித்தாலும் புது விருந் தாகவே தோற்றும். ஆயுந் தொறுந்தொறும் இன்பம் தருந்தமிழ் என்று ஒரு புலவர் சொல்கிறார். கவிதையைப் படிப்பவனுக்கே புதிய புதிய இன்பம் சுரக்குமானால் படைப்பவனுக்கு எத்தனை இன்பம் இருக் கும்! மேலும் மேலும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு உண்டாகிறது, "இத்தனை காலம் நாம்.. படைத்து விட்டோமே; இத்தனை காலம் ஓவியம் எழுதி விட்டோமே; இனி எதற்கு?' என்ற சவிப்புக் கலைஞனுக்கு. வருவது இல்லை. தொழிலாளிக்குத்தான் அத்தகைய சலிப்பு உண்டாகும். லேலை செய்யும் காலத்தையும் கிடைக்கிற ஊதியத்தையும் நினைத்துக் கொண்டிருப்பவன் தொழி லாளி. அவற்றை மறந்து தன் கலைப் படைப்பிவே ஈடுபட் டுக் கிடக்கிறவன் கலைஞன். புதியது ஒன்றைப் படைக்கும். போது அவன் உள்ளத்திலே முகிழ்க்கும் இன்பந்தான் அந்த நிலைக்குக் காரணம். கலைஞன் படைக்கப் படைக்கப் புதுமை ஊறும்.அந் தப் படைப்பைக் கலையார்வத்தோடு காணும் இயல்புடைய வர்களுக்குப் பார்க்கப் பார்க்க இன்பம் ஊறும். கலைஞ னுடைய படைப்பு யாவும் புதிய புதிய பொருள்களே.கலை ஞர்களுக்குள் சிறந்தவன் கவி. அவன் படைத்த கலைப் பொருளாகிய கவி படிக்குந் தோறும் இன்பத்தைத் தருவது. சுந்தரமூர்த்தி நாயனார் கொகுடிக் கோயிலுக்கு வந்து பாடிய பாட்டு முதற்பாட்டு அல்ல. அவர் பித்தா என்று ஆரம்பித்தது முதற் பாட்டு. அதற்குப் பின் பல பதிகங் களைப் பாடினார். ஆயினும் அவருக்குப் புதுமை மணம் மாற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/86&oldid=1725588" இலிருந்து மீள்விக்கப்பட்டது