84 . அருளாளன். அனுப்புகிறானோ அவனையல்லவா நினைக்கவேண்டும்? உலகிலுள்ள மக்கள் பிறருக்கு உபகாரஞ் செய்தால், தம்முடைய முயற்சியினாலே ஈட்டிய பொருளைக் கொடுப்ப 'தாகத் தருக்குகிறார்கள். உண்மை அதுவா? அவர்களா கொடை தருகிறார்கள்? இறைவன் அவர்களிடத்திலே கொடுத்து, இதைக் கொடு அப்பா" என்று சொல்லி யிருக்கிறான். பாங்கியிலே பணத்தைக் கொடுக்கின்ற * காஷி யரைப் போலத்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதை உணராமல் தாம் தருவதாகத் தருக்கிக் கொள்கிறார்கள். அது வெறும் பொய், உண்மையாகக் கொடுக்கிறவன் ஆண் டவன். அவர்களைக் கருவியாகக் கொண்டு கொடுக்கிறான். நமக்கு உதவி செய்கிறவர்களை நன்றியறிவினாலே பாராட்ட வேண்டும். அதோடு. நில்லாமல் அவர்கள் மூலமாகக் கொடுக்கின்ற ஆண்டவனை நிரம்பப் பாராட்டுவதுதான் முறை. கொடை மாத்திரமல்ல. எல்லாவிதமான செயல் களும் இறைவனுடைய திருவருளினாலே நிகழ்கின்றன. அவனன்றி ஓரணுவும் அசையாது. நல்ல செயலைச் செய் தான் என்று ஒருவனைப் பாராட்டுகிறோம். அந்தச் செய லுக்கு மூல காரணனாயிருக்கிற ஆண்டவனையும் பாராட்டு வதுதானே முறை? இவனை ஓர் அளவு பாராட்டிவிட்டு, அதற்கு மேலே பல அளவு இறைவனைப் பாராட்ட வேண்டும். இவன் செய்பவனைப் போலத் தோற்றுகிறான்: இவன் பொம்மை; இறைவன் தான் பின்னாலே இருக்கின்ற றைவன்தான் சூத்திரதாரி. பிறருக்குக் கொடுக்கும் செல்வர்களைப் புகழ்வதற்கே அளவு உண்டு என்றால், கொடுக்காமல் இருக்கிற செல்வர் களைப் பற்றி என்ன சொல்வது? அவர்களைக் காட்டிலும் பொய்ம்மையாளர் வேறு இல்லை. மெய்ம்மையாளனாகிய ஆண்டவனைப் பாடவேண்டும்.
பக்கம்:அருளாளன் 1954.pdf/93
Appearance