"நான் செயல்படவில்லையானால் இந்த உல கங்கள் அழிந்துவிடும். சாதியக் குழப்பங்களுக்கு நானே காரணமாகிவிடுவேன். இந்தப் படைப்பு களை நான் அழிக்கவேண்டும்." 4வது பிரிவில் 13வது கலோகத்தில் கிருஷ் ணன். மேலும் கூறுகிறர். "நான்கு சாதிகளையும் நாளே உருவாக்கிய னேன். வேறுபட்ட குணங்களையும் வேறுபட்ட தொழில்களையும் அவர்களுக்குப் பகிர்ந்தளித் தேன். இவையனைத்தையும் ஆக்கியோன் நானே என்பதை உணர்வீராக". சபாநாயகர்: அதிக நேரமாகிவிடும். யாரும் குறுக்கிடாதீர்கள், காயிதே மில்லத்; நான்' 5வது ' பிரிவுக்கு வருகிறேன். சபாநாயகர்: சுனம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கீதையின் மற்ற சுலோகங்களை -இன் னெரு சந்தர்ப்பத்தில் எடுத்துக் கூறலாம். காயிதே மில்லத்: தாங்கள் கூற விரும்பினா லும் நாள் அதிகமாகக் கூறப்போவதில்லை, ஆனால் 5வது பிரிவிலுள்ள 18வது சுலோகத்தை மட்டும் கூறிவிடுகிறேன். "வேதாந்திகள் கல்வியறியும் பணிவுடமை யும் உடைய பிராமணனையும் பசுவையும் யானை யையும் ஒரு நாயையும், ஒரு தீண்டத்தகாத வனையும் சமமாகவே பார்க்கிறார்கள்" சாஸ்திரங்களின் சம்மதம் கூறப்படு இங்கே தீண்டாமையைப் பற்றி வதைப் பார்க்கிறீர்கள். சாதிகளும் மற்ற செய்தி களும் 'தர்மம்' என்ற சொல்லுக்குத் தவறான அர்த்தம் கற்பித்ததால் வந்தவை என்று நண்பர்கள் கூறி எவ்லாவற்றையும் குழப்புவதற்கு முயல்வார்கள். அவர்களின் கூற்றுப்படியே, மனிதர்களுக் கிடையில் உள்ள கூறவு முறைகளுக்குரிய தர்மம் சாதிகளின் அடிப்படையில்தான் அமைக்கப் பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த விரும்பு கிறேன். நான் மேற்கோள் காட்டியது சமஸ்கிருதமும் இந்து சாஸ்திர ஞானமும் பெற்றுள்ளவர்கள் 270 எழுதியுள்ள மொழிபெயர்ப்பிலிருந்துதான்;' ஆகவே இந்து சாஸ்திரத்தில் சாதீய முறை இருக் இறது என்பது தெளிவாகிறது. சாதீய முறை நிலை பெற்றிருக்குமானால் தீண்டாமையும் நிலைபெற்றே இருக்கும். வேறு புட்ட மக்கள் பிரிவுகளில் ஏதோ ஒரு ரூபத்தில் இந்தத் தீண்டாமை நுழைந்து விடுகின்றது. சாஸ்திரங்களில் சாதீய முறை இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி சர்ச்சை தேவை யில்லை. சாதிகளை இல்லாமலாக்கலே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது போல் சாதிகளை ஒழிப்பதற்குரிய ஒரேவழி மனமாற்றந் தாள். அது கூட ஆரம்பகாரியமேயன்றி, முடிவான காரியம் அல்ல. மக்கள் மத்தியில் சமத்துவம் சகோதரத்துவமும் போற்றி வளர்ப் பதற்கு இதய சுத்தியோடு 'முயற்சி செய்தால், நிச்சயமாக இக்கொடுமையை நீக்கிவிட முடியும். உள்ள மேற்கோள் காட்டவேண்டாம் என்று கூறிவிட்டீர்கள். இந்த மசோதாவில் சில பகுதிகளைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவித்து விட்டு தான் முடித்துக் கொள்கிறேன். சமர்ப்பணம் ஆலயம் என்பதற்கு மசோதாவில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் நலத்திற்காக அவர்களின் உபயோகத்திற்காக செய்யப்பட்ட எந்த ஒரு இடமும் "ஆலயம்" என்றுகருதப்படும் என்று விளக்கம் அனிக்கப்பட் டுள்ளது. எனக்குள்ள அச்சமெல்லாம். இதுதான். ஆலயத்திற்கு இந்த விளக்கம் கூறி அதனால் பல வழக்குகளுக்கு வழியேற்பட்டு விடக் கூடாது என்பது தான். எனது அச்சவுணர்வை ஊர்ஜிதப் படுத்தும் வகையில் மசோதாவின் 6வது பிரிவு அமைந்துள்ளது, ஆலயம் சம்பந்தமாக ஏற் படும் எத்த இடைஞ்சலையும் அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரமும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசால் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்று நான் கருதவில்லை. உதாரணமாக இந்து ஆலயம் என்றால், வைணவ ஆலயம், சைவ ஆலயம் என்று தான் பொருளாகும். சைவ ஆலயத்தில் வைணவர்களுக்கோ வைணவர் ஆலயத்தில் சைவர்களுக்கோ இடமில்லை. இந்த நிலையில்
பக்கம்:கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர்.pdf/286
Appearance