11 'மாஜினியின் பிரதிக்கினை" யென்று இத்தாலிய விடுதலைக் குரலையும், "பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்துச் ' ' சொல்லியும், 'மாகாளி பராசக்தி' உருசிய நாட்டினில் கடைக்கண் வைத்தாள்; அங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுக புரட்சி என்று புதிய ருஷியாவின் எழுச்சி பற்றியும்கவிதைகளைப் பாடிய பாரதி தான் பிறந்த எட்டயபுரத்திற்கு வெகு அருகில் இருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒரு வரிகூட பாடவில்லை. இந்த நிலைக்கும் அவரை தள்ளிவிட்டது யார்? அவரின் அந்த நிலைக்கு காரணம் அவரைக் கவனியாது விட்டு விட்ட காங்கிரஸ்; அத்துடன் அறிஞனைப் போற்றிட மறுத்த சமுதாயம்; புலவனின் வறுமையைப் போக்கிட உதவிடாத சமுதாயம். வளமையான கவிதை; வறுமையான வாழ்வு இத்தகைய இக்கட்டான சூழலில் அப்படியொரு முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் பாரதி. ஒரு சில வருடங்களிலே 12-9-1921இல் இவ்வுலகிலிருந்தும் மறைந்தார். தேசபக்தச் செம்மல் பாரதி “சதையை துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ.... ஜீவன் ஓயுமோ...? இதயத்துள்ளே இலங்கும் மஹாசக்தி எதுமோ! நெஞ்சம் வேகுமோ!..... என்ற தேசபக்தரின் சொல்லிற்கு இலக்கணமாக வீரத்துடன் முழங்கியவர் பாரதி. தேசபக்தியே சர்வ சுபங்களுக்கும் மூலதனமானது என்ற கொள்கையின் அடிப்படையில் பால இந்தியா சபை, சுதேசி வஸ்து பிரசாரணி சபை, பாலபாரத சங்கம், சென்னை ஜனசங்கம் முதலிய காங்கிரஸ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அரசியல் அமைப்புக்களின் தோற்றத்தில் பாரதியின் பங்கு சிறப்பானது. காங்கிரசில் அவர் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். காங்கிரஸ் குறித்து இந்தியா பத்திரிகையில் அவர் எழுதியுள்ள தலையங்கங்கள் காலத்தால் அழியாதவை; அவை மட்டுமே தனி நூலாக வெளிவரும் தகுதியுடையது. பாரதியார் களம்பாடியது 1906 தொடங்கி 1910 வரையுள்ள ஐந்தாண்டுக்காலத்தில் தான் என்பர் ம.பொ. சிவஞானம். 40 "பாரதியின் தேசபக்தி கடன் வாங்கின சரக்கல்ல அது அவனுடைய சொந்த சொத்து தமிழ்நாடு தன் பாரதி அப்படித்தான் எனக்குச் சொல்லத் தெரியும்" " என்ற வ.ரா.வின் வரிகளை எண்ணிப்பார்க்க வேண்டியதும் 40. பாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை, 1983, பக் 133. 41.வ.ரா., மகாகவி பாரதியார், 1949, பக் 20. 31
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/32
Appearance