உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை சிவபெருமானுடைய புகழைச் சொல்லும் சைவத் திருமுறை கள் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளில் முதல் ஏழும் தேவாரம் என்னும் பெயரை உடையவை. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் மூவரும் பாடியவற்றைத் தேவாரம் என்று வழங்குவர். மாணிக்கவாசகர் பாடிய திருவாசக மும், திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை. திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை. திருமூலர் திருமந் திரம் பத்தாம் திருமுறை. ஆலவாய் இறைவன் திருமுகப் பாசுரம் முதல் காரைக்கா லம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய பலர் பாடிய நூல்களின் தொகுதி பதினோராந் திருமுறை. பெரிய புராணம் பன்னிரண்டாந் திருமுறை யாகும். முதல் இராச ராச சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியார் பதினொரு திருமுறைகளை வகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. அம் மன்னன் காலத் துக்குமுன் தேவாரப் பதிகங்கள் முதலியன பலவாறாகப் பாடப் பெற்று வந்தன. அவற்றைக் கண்டெடுத்து ஒழுங்குபடுத்தும் தொண்டு புரிந்தவன் இராச ராச சோழன். இந்தப் பன்னிரண்டு திருமுறைகளில் முதல் மூன்றும் திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இயற்றியவை. நான்குமுதல் ஆறு வது திருமுறைகள் வரையில் உள்ளவை திருநாவுக்கரசு நாயனார் இயற்றியவை: ஏழாவது திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அருளி யது. இந்த ஏழுமே தேவாரம் என்றும் அடங்கல்முறை என்றும் வழங்கப்பெறும். . திருமுறை என்பதற்குத் தெய்வத் தன்மையையுடைய நூல் என்பது பொருள். முறை - நூல். திரு,தெய்வத் தன்மையைக் குறிக்கும் அடை. தேவாரம் என்பதற்குப் பலவிதமாகப் பொருள் கூறுவர். தெய்வத்தின்பால் உள்ள அன்பினாற் பாடப்பெற்ற பாடல் என்று சிலர் கூறுவர்; வாரம்-அன்பு. தெய்வத்துக்கு ஆரம்போல அமைந்தது என்பாரும் உளர். இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன், முறைவரை முயல்ல தொக்குமால்' (கந்தபுராணம், அவையடக்கம்) முறை என்பது நூல் என்ற பொருளில் வந்தது காண்க. வேனென என்பதில்