உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30

உள்ளம் கவர் கள்வன் சொல்வார்கள். இறைவன் இந்து ஆறு சுவையுமாக இருக் கிறான். ஆறாகிய ஆகின்ற சுவைகள் அவனே என்பார், "ஆறார் சுவை” என்றார். சங்கீதம் இனிய ஒலியைப் பற்றியது. ஓசையினால் இன்பத்தை உண்டாக்குவது. இன்னோசையின் ஏற்றத் தாழ்வினால் கீதம் பிறக்கிறது. ஓசையைக் கணக்குப் பண்ணி அடிப்படையான ஓசைகள் இன்னவை என்று வரையறுத்திருக்கிறார்கள். அவை ஏழு. அவற்றை நரம் பென்றும் ஸ்வரம் என்றும் சொல்வார்கள். சரிகமபதநி என்ற ஏழு எழுத்துக்களாலும் குறிக்கப்பெறும் ஓசை களே அவை. அவற்றை ஸட்ஜம், ரிஷபம்,காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று வட மொழியிலும், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று தமிழிலும் கூறுவர். இவற்றிற்கு ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்பவற்றை எழுத்தாக வைத்து வழங்குவது பழந்தமிழ் மரபு. இறைவன் இசை மயமாய் இருக்கிறான். நாதம் என்ற தத்துவத்தை உண்டாக்கினவனும், நாதமாகவே இருப்பவ னும் அவன்தான். ஆதலின் இசையும் அவனாகவே இருக் கிறான். இசையின் அடிப்டையாகிய ஏழு ஓசையாக அவன் விளங்குகிறான்; அதனால், "ஏழோசையொடு என்று சம்பந்தர் பாடினார்.* மக்கள் அறிந்த பொருள்களாக இருந்தாலும் எல்லை அறியப்படாத பொருள்கள் இரண்டு. அவை காலம், இடம் என்பவை. மனிதன் காலத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டவன். அவற்றின் எல்லையை உணரர் தவன். யார் காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற் பட்டவனே 44 ஏழிசையாய் இசைப்பயனாய். (சுந்தரர் தேவாரம்.)