உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மென்னு சொல்லுதா. நீ என்னமோ, பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார் சங்கரலிங்கம் பிள்ளை.

"அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான். என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ."

"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"

"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."

"சதி, நீ என்ன சொல்லுதே?"

"பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள்.

"சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப் போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொறவு நாவன்னாவை விட்டு நான் விசாரிக்கேன்."

"அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான்.

"நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார்.

"என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன்.

கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும், 25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது.

வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பக்ஷிஸ்' தட்டாமல் போகவில்லை.

"ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா, அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார்.

பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார் பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல் மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

2

பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம் பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.

சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை

114

ஒப்பந்தம்