உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மல்லாடு மைம்புலனான் மதிமயங்கிப் புவியகத்தே சொல்லாடும் பலபவமுந் துணிந்துபுரிந் தனனந்தோ அல்லாடு மனத்தேனை யாண்டருளு மாறுமுண்டோ கல்லாடுந் தோளுடையாய் காந்தமலை வேலவனே. வேதா வகுத்த விதியீதோ நின்பெயரை ஓதாத நாவுடையேன் உருகாத நெஞ்சுடையேன் தீதாய நடையுடையேன் சேருமல மாந்தொகுதி காதார்வ முடையர்தொழுங் காந்தமலை வேலவனே. ஆர்வந் திகழ்ந்த வகமுடையார் நினையறிந்தே சீர்வந்த இன்பத்திற் றிளைத்திருத்தல் கேட்டிருந்தும் பார்வந்த பயனாநிற் பணிந்திருக்கு மாற்றியேன் கார்வந்த செஞ்சிகரக் காந்தமலை வேலவனே. இன்றுயிரை நமன் பிரித்தே யேகிவிடி னென்செய்வேன் நின்றுகளில் தாணீனையும் நெஞ்சமிலேன் வஞ்சனையேன் என்று தன் புடையேனா வின்புறுவே னென்றுமனம் கன்றுகின்றேன் வந்தருளாய் காந்தமலை வேலவனே. பாவவிலக் கணத்திற்கோர் பாங்கா ரிலக்கியமாய் நீவவருந் தீவினையேன் நிற்கின்றேன் உலகமெனை 10. 11. 12. 13. நோவவசை கூறுவதும் நோக்ககிலேன் உய்வன்கொல் காவசைய மயிலாடுங் காந்தமலை வேலவனே. 14. தத்துவங்க ளாயுந் தகுதியிலேன் நல்லவர்பாற் பத்தியிலே என்னடையிற் பயின்றுமிலேன் பாரகத்தே எத்துபுல வழியலைந்தே னென்னையி டேற்றுவையோ கத்துகட அலகுபுகழ் காந்தமலை வேலவனே. 15.