உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நின்னுருவ முள்ளுணர்ந்தே நெகிழ்ந்திருக்க வேண்டுமென்றால் மன்னியவென் பொறிப்பகைஞர் மாறுபுரி கின்றனரே துன்னியநின் றோற்றமுறத் தூயவருள் தந்தளிப்பாய் கன்னவிலுந் திண்டோளாய் காந்தமலை வேலவனே. 16. இன்னம் பிறப்பி லிசைந்து துயர் படமாட்டேன் முன்னம் அடைந்ததுயர் முற்றும் அமையுமினி நின்னன்பே தலைக்கொள்ள நீயருளாய் இல்லையெனின் கன்னெஞ்ச னென்பேன்காண் காந்தமலை வேலவனே. 17. மாலுடையேன் போற்று மதியில்லேன் ஆசைபொருட் பாலுடையேன் நின்னைப் பணியகில்லேன் ஆயினினி ஏனுடைய தொண்டனென வெவ்வாறு கொள்வாய்செங் காலுடைய தண்டையுளாய் காந்தமலை வேலவனே. 18. ஆனவிரு மூன்றாகு மக்கரங்க ணாவியலச் சானஞ்செய் தறிந்திலேன் றக்கவரு ளெற்குறுமோ மோனஞ்செ யுள்ளத்து முளைத்தெழுந்த கதிர்விளக்கே கானஞ்செய் வண்டர்பயில் காந்தமலை வேலவளே. 19. கட்டளையிட் டென்னையிங்குக் காட்டினைபுன் புலப்பகைப் மட்டளையும் நின்னடியில் மனமிருக்க வொண்ணாதோ [பால் நட்டளையு ஞானமுறு நற்றவத்தார் பெற்றவைப்பே கட்டளைசெய் மலர்ப்பொழில்சூழ் காந்தமலை வேலவனே.20. வளமலியும் புவிவாழ்க்கை மாண்புடைய தெனநினைந்தே தளமுடைய நின்னடியைச் சாரும் வழியறியேன் களமுடையர்க் கரியவனே காந்தமலை மேயவவென் உளமுருக வேண்டாவோ உள உளமுருக வேண்டாவோ? 21.