முன்னுரை கந்தபுராணத்தைப் பற்றித் ஆண்டவன் திருவருளால் தொடர்ச்சியாக இருபது நாட்கள் விரிவுரை ஆற்ற வேண்டுமென்று அன்பர்கள் குறிப்பிட்டார்கள். அந்த அன்பர்களுக்குள் சிறந்த திரு வீரபாகுவே இந்தப் பணியை எனக்குக் கொடுத்தார். முருகப் பெருமானுடைய சேனாபதியாகிய வீரபாகுவின் கட்டளையென்றே இதைக் கொள்கிறேன். முருகன் கட்டளையை மறுத்தாலும் மறுக்க லாம், வீரபாகுவின் ஏவலை மறுக்க முடியுமா? கைலாசத்தில் சிவபெருமானுக்கு முன்னிருக்கும் நந்தி அதிகார நந்தி. அதுபோல முருகப்பெருமானுக்குப் பிரதமராக இருப்பவர் வீர சேனாபதி வீரபாகு. அவருடைய ஆணையை மறுக்கக் கூடாது. கன இங்கே வந்து இருபது தினங்கள் கந்தபுராணத்தைச் சொல்ல ஒப்புக்கொண்டபோது எனக்குச் சிறிது அச்சமாக இருந்தது. சேர்ந்தாற்போல இருபது நாட்கள் சொல்லவேண்டும் அல்லவா? எனக்கு எத்தனையோ வேலைகள் இருக்க அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இங்கே வந்து தொடர்ச்சியாகச் சொல்வது என்றால், முன் பழக்கம் இருக்கவேண்டும். நான் கந்தரனுபூதி முதலியவற்றைப் பேசிப் பழக்கப்பட்டவன். கந்தபுராணத்தைச் சொன்னது இல்லை. ஆனால் இறைவன் திருவருள் இப்படிக் கூட்டுவித்தது. இங்கே சைவசித்தாந்தம் நன்றாக அறிந்த பெரியவர்கள் இருக்கிறார்கள். கந்தபுராணத்தில் ஆழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாலே விரிவுரையாற்றி நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்ற அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சம் நேற்றோடு போய்விட்டது. அதற்குக் காரணம் இதுதான். இந்திரனுடைய குமாரன் சயந்தன் சூரபன்மன் அவனையும் தேவர்களையும் சிறையில் இருந்தான். சிறையிலிட்டிருந்தான். அப்போது முருகப்பெருமான் சயந்தன் கனவில் எழுந்தருளி அவனுக்கு ஆறுதல் கூறினான். "உனக்கு விடுதலை கிடைக்கும். வீரபாகு வருவான்" என்று கூறினான். சயந்தன் அந்தக் கனவினால் தைரியம் பெற்றான். இது கந்தபுராணத்தில் வருகிறது. அதேபோல்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/20
Appearance