உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போ. மடா: நமச்சிவாயத்தின் மீது ஆணை! அஞ்ஞான சொரூபத்தை அடித்து விரட்டுங்கள்.

[பலரும் சேர்ந்து மடாதிபதியைக் கீழே சாயுமளவு அடித்துவிடுகிறார்கள். அமளி அதிகமாகிறது. போலி மடாதிபதி, குறிப்பாக ஒரு பண முடிப்பை எடுத்துக்கொள்கிறான் கந்தபூபதி அவன் கரத்தைப் பிடித்திழுத்துக்கொண்டு ஓடுகிறான். அமளியிலே இதை யாரும் கவனிக்கவில்லை. முருகதாசன் கற்பூரக் குவியலைக் கொளுத்துகிறான். கீழே வீழ்ந்த பிறகும் மடாதிபதியை அடிப்பது ஓயவில்லை. அஞ்ஞான சொரூபம் ஒழிக! அருளாளர் வாழ்க! அஞ்ஞான சொரூபம் ஒழிக—என்ற முழக்கம் பலமாகிறது. மடாதிபதி மாண்டுபோகிறார்.]

பெரி: ஒழிந்தது அஞ்ஞான சொரூபம்! மெய்ஞ்ஞானம் எங்கே!—(என்று ஆர்வத்துடன் கேட்க).

[பலரும் எங்கே? மடாதிபதி அருளாளர் எங்கே? அரனைக் கண்ட அண்ணல் எங்கே?—என்று கேட்கின்றனர்.]

கந்த: (உருக்கமாக) அப்பனே! ஒப்பிலாமணியே! உன் திருவிளையாடலை என்னென்பேன்! மெய்யன்பர்களே! நீறு பூசுங்கள்! நாதன் நாமத்தைப் பஜியுங்கள், அருளாளரின் மெய்ஞ்ஞான உருவம் அரனடி சேர்ந்துவிட்டது—அஞ்ஞானத்தை அடித்து வீழ்த்தியதும், இங்கோர் ஜோதி தோன்றிற்று—மெய்ஞ்ஞானி அதிலே கலந்துவிட்டார்—பொன்னார் மேனியனைப் போற்றுங்கள்......அருளாளரின் சடலத்தை அடக்கம் செய்வோம் வாரீர்.....

[கண்களைத் துடைத்துக்கொள்கிறார், பலரும்]

பெரி: பட்டம் யாருக்கு.....?

[கந்தபூபதியும், முருகதாசரும் கையாளின் காலில் வீழ்ந்து வணங்கி, மடாதிபதி மாசிலாமணியார் வாழ்க! என்று கூறுகிறார்கள்.]
[கையாள் கண் துடைத்துக்கொள்கிறான்.]

312