உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

155

இப்படி. நீயே சொல், ராதா எனக்குச் சொந்தமா? அந்தக் கிழவனுக்கா?”

“யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா ராதாவை! ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் ராதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்” என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான்; ஆகவே தான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என் வேதவல்லி எண்ணி விசனித்தாள்.

ராதாவைப் பெற்றவள் அவள். அவளே ராதாவை கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ, “ராதா யாருக்குச் சொந்தம் கூறு” எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்?

“கதவைத் தட்டுவது யார்”

“அம்மா! நான்தான் ராதா!”

“வந்தாயா! கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை” என்று கூறி, ராதாவை வேதவல்லி அழைத்து வந்தாள்.

பரந்தாமனைக் கண்டாள் ராதா! அவள் கண்களில் நீர் பெருகிற்று.

உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப் பட்டதுபோல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள்.

அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம். அன்றொரு நாள் ஜுரமாக இருந்தபோது ராதாவுக்கு முத்தமிட்டகாட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்புடன். அவன் மீண்டும் உளறினான். “ராதா! நான் உன்னனக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே; உன்னை விடுவேனோ! ஒரு கயறு உன்னை என்னிடமிருந்து பிரித்து விடுமா! என்னைவிட அக்கயறு என்ன பிரமாதமா? வா! ராதா? வந்துவிடு!” என்று உளறினான்.