உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுச்சி முரசு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பதினோராயித்துக்கு மேற்பட்ட பார்ப்பனர்கள் கங்கைக் கரையிலிருந்து வரவழைக்கப்பட்டனர் யாகம்செய்ய. இவை யனைத்தையும் மிக அழகாக தோழர் C.N.அண்ணாதுரை அவர்கள் தமது சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்தில்' சித்தரித் துக்காட்டினார். இக்காலத்திலேயே ராஜாசர். அண்ணாமலைச் செட்டியார் ஷஷ்டியப்த பூர்த்திக்கு அறுபது பார்ப்பனர் களுக்கு வீடுவாசல் பொருள்கள் தானம் செய்தார் என்றால் சிவாஜி அக்காலத்தில் ஏன்கொடுத்திருக்க மாட்டான்? சிவாஜியின் பொருள் வளம் பார்ப்பனர்களுக்குக் கொடுத்த தால் குன்றியது. கடைசியாக சிவாஜி பொக்கிஷத்தைத் திறந்து பார்க்க காலியாக இருந்தது. போர் புரிந்த வீரர் களுக்குப் பொருளை அள்ளிக்கொடுக்காது பார்ப்பனர்களுக் கொடுத்து வீணாக்கினோமே என்று எண்ணி, எண்ணி ஏங் கியே இறந்தான். சிவாஜிக்குப்பின் சாம்பாஜி பார்ப்பன பீஷ் வாக்களிடம் அதிகாரத்தை விட்டுவிட்டு அடிபணிந்தான். இறுதியில் அழிந்தான் மாற்சரியங் கொண்ட மராட்டியம் ஆரியத்தால் அழிக்கப்பட்டது. ஆரியத்தின் ஆணவச்சிரிப்பு அத்துடன் நின்றுவிடவில்லை. நாலந்தா என்ற பல்கலைக்கழகம் ஆரியத்தினாலேயே அழிக்கப்பட்டது. இது நாம் கூறுவதல்ல சீன யாத்திரி கரின் குறிப்பில் காணப்படுவது. அது பௌத்தரின் பல் கலைக்கழகம். அங்கே பல்லாயிரக்கணக்காண மாணவர்கள் கல்வி பயின்றனர். ஆயிரக்கணக்கான விரிவுரையாளர்கள் இருந்தனர். இன்னும் மாணவர்கள் வாழ்ந்த விடுதிகள் இடிந்து காணப்படுகின்றன. மாணவர்களிடை யே ஆசிரியர் கள் வாழ்ந்துவந்தனர் என்பதும் காணக்கிடக்கின்றது. அப் பேர்பட்ட பல்கலைக்கழகம் ஆ ஆரியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது, அங்கிருந்த நூல் நிலையம் சாம்பலாக் கப்பட்டது. பல வீடுகள் எரிக்கப்பட்டன. ஆரியம் இதனைச் செய்து அகமகிழ்ந்தது. அலெக்ஸாண்டர் படையெடுப்பிலிருந்து ஆங்கிலேயர் படையெடுப்பு வரையிலும் ஆரியம் நாட்டைக் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/20&oldid=1732322" இலிருந்து மீள்விக்கப்பட்டது