உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மதுரைக்கோவை. விரிக்குந்தழையதொர்மா தவிக்கீழ் வெவ்விடாய் கழியப் பிரிக்குமிளநீரளித்தவர்க்கேதுகொல்பேதைமையே. பாங்கிழன்னுறு புணர்ச்சிமுறையுறக்கூறல். நலந்தருவேற்கைநறுந்தார் மதுரைநன்கார் சிலம்பி னுலந்தருதோளண்ணலேயிருவீருமொருதனியே வலந்தரு சென்னையம்பூம்பொழில்வாயெழின்மாதவிக்கீழ் கலந்தனிராயினென்னாலென்கொலாமினிக்காரியமே. தன்னிலைதலைவன்சாற்றல். பொருளன்றியின் றிவ்வுலகமென்பாரதுபோன்றினியா னுருளொன்றுமானெடுந்தேரன் மதுரையுதாரிவெற்பி லிருளன்றியொன்றும் பொருவாக்குழலியையெய்துறநின் னருளன்றியின்றுகண்டாய்பிறிதொன்றுமணியிழையே. பாங்கியுலகியலுரைத்தல். வடுவின்றிய நெறித்தாயங்கொர்வாலுடைமந்திதழீஇக் கடுவன்றுயில்வதுகண்டனையேகமழ்பூஞ்சிலம்பா நடுவன்புகழாபரணன்மதுரை நற்சென்னையன்ன நெடுவண்குழலார்தமைப்பெறுவாயினிவேரைந்தே. தலைமகன்மறுத்தல். கோனனையான் வெங்கொடுங்கலிதேய்க்குங்கொடையினுயர் வானனையான் சிலை மாரன் மதுரைவரையனைய தேனனை பூங்குழற்சிறடிப்பாவையின்றேமொழியை மானனையாய்வரைவேனீயெனாருயிர்வைத்தபின்னே. பாங்கியஞ்சி யச்சுறுத்தல். பனிக்குங்கதிர்குன்றப்பாய்பரியுந்திப்பகல் கரந்தான் றனிக்குந்தகையினர் செல்லுதிர்யாங்களுந்தங்கலமா வினிக்கும்புகழின்மதுரையங்கோன் வெற்பிலெப்பொழுதுங் குனிக்குஞ்சிலையினரீட்டியர்காணெங்குறவர்களே. தலைவன் கையுறைபுகழ்தல். பேணார்கழியவொழிக்குந்திறற்பெருமான் மதுரைச் சேணார்முகிலுரிஞ்சச்சூழ்நெடுமதிட்சென்னையன்னீர் மாணார்கிளைவயினீங்கித்தவம்புரிந்துங்கண்மணிட பூணார்முலைகொளவந்ததுகாணிந்தப்பூந்தழையே. கூக கூஉ கூங கூச கூரு கூக கூஎ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/25&oldid=1734523" இலிருந்து மீள்விக்கப்பட்டது