28 மதுரைக்கோவை. யிலகார்மதுரையிறைவன் சிலம்பினம்மீர்ம்புனத்தை விலகானணங்கனையாயெவனோவொர்விருந்தினனே. இறைவியறியாள்போன்று குறியான் கூறல். வேலுக்குநேரெனவெவ்விடத்தோடு விராய்க் கிடந்து நீலுக்குநோருங்கூர்விழியாயிந்தநீணிலத்திற் ண சூலுக்குநிற்குந் துணை மலர்க்கையன்றுரை மதுரை மாலுக்கு நேருங்கண்டாய் நெடுஞ்சென்னை வடமலையே. பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல். வானையுங்கோட்டுமலர்க்கை மதுரைக்கோமான்சிலம்பிற் கானையுங்காட்டுகருங்குழலான்றுகண்டதுண்டே யானையுங்கேட்டுப் பின்னூரையும் பேரையும்யாதென்றுமுன் மானையுங்கேட்டுநம்மீர்ம்பனத்தேவந்தவள்ளலையே. பாங்கியைத் தலைவி மறைத்தல். நாவையெடுக்குதனன்றன்று காண்கநண்ணார்கழிய வேவையெடுக்குமிறைவன் மதுரையிருஞ்சிலம்பின் மாவைநகரை வின விவரும்வழிப்போக்கற்கண்டு பாவையினையனையாய் நின்று கூறும் பழிமொழிக்கே. பாங்கி யென்னை மறைப்பதென்னெனத் தழால். நிறைக்கின்றவன் பினனற்புலவோர்க்குநிதநிதிய மிறைக்கின்றவள்ளன்மதுரையங்கோன் வெற்பிலென்னையு நீ மறைக்கின்றவாறென்மலரடி போற்றிவழுத்து தலைப் பிறைக்கென்றுமாமிணைவாணுதலாய் சற்றும் பேணலையே. பாங்கி கையுறைபுகழ்தல். மணியொத்தொளிர்நிரைவாணகையாய் மிகையாம் வறுமைப் பிணியற்றொழியவருள்வோன்மதுரைப்பெருஞ்சிலம்பிற் றணியத்தகுந்தது காமவெவ்வேட்கை தனிமுலையா ரணியத்தகுந்ததுதானொளிகாலிவ்வருந்தழையே. தோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல். வானார்கரத்தன்மதுரையங்கோன்வரையார் கடுவன் றேனார் முதிர் மாங்கனிகொண்டெழில்மந்திவாய் திணிப்பக் கானார்மலர்க்குழலாயென்னை நோக்கிக்கரைந்துருகிப் போனாரொருவர்பின்வந்திலரானம்புனத்தயலே. க்கஎ ககஅ ககக கஉ0 கஉக கஉஉ கஉங
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/29
Appearance