உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்கவில்லை! காலம் கெட்டுப்போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள். கலி வந்துவிட்டானாம்! அதனால்தான் எல்லாம் தலைகீழாக நடக்கிறதாம்! பழையகாலப் பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்தபோதெல்லாம். யார் கேட்டாலும் கேட்காவிட்டா லும் சொல்லத் தவறுவதில்லை. சாஸ் சாம்பசிவ ஐயர் அடிக்கடி இப்படி கூறுவதுண்டு. திரங்களையும், பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்ப தில்லையே என்று ஐயருக்கு மிகவும் வருத்தம். சாஸ்த்ரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங் களைக்கூட ஐயர் ஸ்தாபித்தார். அறிவுக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள் ! ஐயரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை. ஐயரின் மனைவியே ஐயர் பேச்சைக் கேட்பதில்லை. வுளைத் தூக்கி உடைப்பிலே போடுங்க, என்று அந்த அம்மாள் கடுங் கோபத்துடன் பலதடவை கூறியிருக்கிறாள். குறை யைத் தீர்த்துவைக்காத கடவுளுக்கு திட்டுத்தானே கிடைக் கும்? ஐயரின் பக்தியும் அதிக நாள் நீடிக்கவில்லை. கல்யாண மான 10 வருடத்தில் ஐயருக்கு கடவுள்மீது கசந்துவிட்டது. கடவுள் காரியத்திற்கு கால்துட்டுகூட செலவழிப்பதில்லை என்று கங்கணம் கட்டியுள்ளார். சாம்பசிவ ஐயர் சாதாரண ஆளல்ல, பெரிய மிராசுதார் ஆகாகானுக்கும் அய்தராபாத் நிஜாமுக்கும் அடுத்தபடியாக உள்ள ஆஸ்திக்காரரோ என்று அனைவரும் நினைக்கக்கூடிய அளவுக்கு பெரிய பணக்காரர். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/6&oldid=1735743" இலிருந்து மீள்விக்கப்பட்டது