இல்லை! "காதல் சாதாரணமானதல்ல. மனித சமுதாயத்தின் ஜீவனாகும். இனிமேல் காதல் அதோகதியாவதா? நீங் களெல்லாம் காதலுக்கு சமாதி கட்ட விரும்புகிறீர்களா? காதல் இன்றேல் சாதல் என்பார்கள். இந்த சட்டம் காதலுக்குக் கல்லறை கட்டுவதாக இருக் கிறது. அது அமுலுக்கு வரக்கூடாது. வந்தால்..... காதல்மேல் காதல்கொண்ட ஆண் பெண் இரு பாலர்க ளும் எதிர்த்துப் போராடாமல் இருக்கமாட்டார்கள். இதை உடனே கைவிடவேண்டும்". இப்படி ஆணித்தரமாக சட்டசபையிலே நான் பேசி னேன், ஒரு எம். எல். ஏ. வாகிய நான் பேசாமல் இருக்க முடியுமா? காதலுக்கு வந்திருக்கிற சட்ட ஆபத்தைத் தடுக்க. என்னைப் போன்ற எம். எல். ஏ. க்கள் தானே பேச வேண்டும்? மற்ற எம். எல். ஏ. க்கள் வாய்மூடி மௌனி யாக இருந்தார்கள். நான் ஒருவன் தான் எல்லோரையும் என் பக்கம் இழுக்க ஆவேசமாக பேசினேன். 'இனிமேல் யாரும் ஒரே ஜாதிக்குள் பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாதாம். வெவ்வேறு ஜாதிக்குள்ளே தான் கல்யாணம் செய்ய வேண்டுமாம். கலப்பு வேண்டு மாம். கலப்பு மணம் ஏற்பட்டு ஜாதிகள் அடியோடு ஒழி யவே இந்த சட்டமாம்! இதை மீறினால் கடுமையான தண்டனை தரப்படுமாம்!" 30
பக்கம்:கேட்கவில்லை.pdf/31
Appearance