உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன்? இதை கேட்டதும் காரில் வந்தோர்களின் முகம் கதிர வன் ஒளி பட்டதுபோல் ஜொலித்து மலர்ந்தது. பர்ஸை எடுத்து நூறு ரூபாய் நோட்டாக பத்தை எடுத்து "இந்தாங்க ஆயிரம் ரூபாய் நாங்கள் வரும் வரை இளைய ஜமீந்தார் செலவுக்கு இருக்கட்டும்" என்று முருகேசரிடம் கொடுத் தார்கள். 'இது எதற்கு? நான் கவனித்துக்கொள்ள மாட்டேனா?" என்று கூறி பணத்தை வாங்க மறுத்தார் முருகேசர். "நீங்க அப்படி சொல்லக்கூடாது. கும்பம்பட்டி 350 மைல்கள் இருக்கின்றன. நாங்கள் போய் பெரிய எஐ மானை அழைத்துக்கொண்டு வரவேண்டும். இரு நாட் களாவதும் ஆகும். அதுவரைக்கும் செலவுக்கு வேண்டா மா?' என்று கூறி ஆயிரத்தை முருகேசரிடம் கொடுத்து விட்டு காரில் வந்தோர் புறப்பட்டனர். இளைய ஜமீன்தார் சொக்கநாதருக்கு ஓர் தனி அறை ஒதுக்கப்பட்டது. ஒரு பெரிய ஜமீன்தார் மகன் தன் வீட்டில் தங்க வந்தது பெரிய பாக்கியம் என்று முருகேசர் கருதி னார். தன் ஒரே மகள் மனோரமாவை இளைய ஜமீந்தாருக்கு. பிடித்தால்...? இதற்குமேல் அவரால் ஆனந்தத்தை தாங்க முடியவில்லை. 'மனோரமா என்று கூப்பிட்டார்' 'என்னப்பா' என்று கேட்டபடி வந்தாள். "இளைய ஜமீந்தார் மேலே இருக்கிறார் மாலை டிபன் நீ தான் கவனிக்கவேண்டும் என்றார். மனோரமா வாயளவில் மறுத்தாள். ஆனால் மனம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஈட்டிவிழி கட்டழகை காணும் போது மனம் ஒப்பாமல் என்ன செய்யும்? 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/28&oldid=1735765" இலிருந்து மீள்விக்கப்பட்டது