சிறைச்சாலை! சிறைச்சாலை இந்த பெயரைக் கேட்டவுடனே எல்லோருடைய உள் ளத்திலும் ஒருவித பயம் ஏற்பட்டது. இன்றல்ல, ஒரு காலத்தில். பேய், பூதம், பிசாசு, கடவுள் போன்றகற் பனைகளுக்கு மக் கள் பயந்து வாழ்ந்ததைப்போல சிறைச்சாலைக்கு மனிதர்கள் கற்பித்த இழிவுக்காக அஞ்சியே மக்கள் வாழ்ந்தனர். சிறைக்குச் சென்றவனா? அவன் சீர்கெட்டவன் காலி-ரௌடி-போக்கிரி- சமூக விரோதி! ஊரோடு சிறை சென்றவனை யாருமே சீந்தக்கூடாது! ஒட்டாமல் ஒதுக்கி வைக்கவேண்டும்! பெண் கொடுக்கக் கூடாது அந்தப் பேயனுக்கு. இப்படி பல சம்பிரதாயங்களைச் சமூகம் ஏற்படுத்தியது, சிறை சென்றவர்களை மேலும் தண்டிக்கவோ திருத்தவோ! இதனால் சிலர் சிறைசெல்லவே பயந்தனர். சிறைக்குச்செல்ல நேர்ந்து விட்டால்...... சமூக சம்பிர தாயத்துக்குப்பயந்து...தற்கொலை செய்துகொள்ளவும் துணிந் தனர். இதனால்தான் இன்றுகூட சிறைச் சாலையில், தண் டிக்கப்பட்டோர் உள்ளே சென்றவுடன் இடுப்பிலே கட்டப் பட்டுள்ள (அரைஞாண்) கயிற்றை, அதிகாரிகள் அறுத்து விடுகின்றனர். சமூகத்திற்குப்பயந்து, அந்தக்கயிற்றின் உத வியால் தண்டி க்கப்பட்டவன் தற்கொலை செய்துகொள் 38
பக்கம்:கேட்கவில்லை.pdf/39
Appearance