சிறைச்சாலை வானோ என்று சந்தேகித்தே இன்றைக்கும் அதிகாரிகள் அத்தகைய முறையைக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்தக்காலத்தில்? சமூகத்தின் கெடுபிடிக்குப் பயந்து எந்தக் கைதியும் தற்கொலை செய்து கொள்வதே இல்லை. சமூகத்திற்கும் எவரும் பயப்படுவதே இல்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? சமூகம் அலம் சியப்படுத்தப்படுவது ஏன்? இவைகளை ஆராய்வது மிகமிக அவசியம். கோழை தண்டிக்கப்படும்போது சமூகத்திற்கும் சிறைச் சாலைக்கும் பயப்படுவான்; ஆனால் வீரன் தண்டிக்கப்படும் போது எதற்கும் அஞ்சமாட்டான். வீரன் யார்? கோழை யார்? குற்றவாளிதான் இயற்கையிலே கோழையாவான். கோழையிடத்திலே பயம் நிச்சயம் இருக்கும்! உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது சமூகத்திற்கு-சிறைச் சாலைக்கு இந்த நாட்டில் மதிப்பு இருந்தது. ஆனால் குற் றமற்றவன் (வீரன்) அக்கிரமமாகத் தண்டிக்கப்படும்போது சமூகத்தை - சிறையை எதிர்த்துப்போராடி தகர்த் தெறிந்து விடுகிறான். இப்படி ஒரு (குற்றமற்ற) வீரனால் அல்லது கூட்டத் தால் சமூகமும், சிறையும் அலட்சியப்படுத்தப்படும்போது.. கோழையும் (குற்றமுள்ளவனும்) பயமற்ற தன்மைக்கு வந்துவிடுகிறான். 39
பக்கம்:கேட்கவில்லை.pdf/40
Appearance