உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ. வி. பி . ஆசைத்தம்பி பழைய காலத்தில் குற்றம் புரிந்தவர்கள் நீதியின் (Ccurt of Justice)படி தண்டிக்கப்பட்டார்கள்; ஆனால் ந் த காலத்தில் சட்டப் (Court of Law) படி தண்டிக்கப் படுகிறார்கள். இதனால் உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடவும். நிரபராதிகள் தண்டிக்கப்படவும் செய்கின்றனர். மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, கை யோடு பிடிக்கப்பட்டும், நீதியின்படி உடனே தண்டிக்கப்பட முடியாமல், சட்டப்படி விசாரிக்கப்பட்டு, சட்டப்படிதான் தீர்ப்பு வழங்கப்படுகிறதே தவிர, நீதியின்படி அல்ல. எதற்கும் அப்பாற்பட்ட நீதியை, இன்றைய ஆட்சி முறை சட்டத்திற்குள் அடக்கி வைத்திருக்கிறது சட்டத் திற்கு அப்பால் மறைந்து கிடக்கும் நீதியைப்பற்றி, இன் றைய சமூகம் கவலைப்படுவதே இல்லை. இதனால்தான் இன்றைய சமூகமும்... சட்டமும் துணிச் சலாக புறக்கணிக்கப்படுகிறது; எதிர்க்கப்படுகிறது. சட்ட விரோதம் செய்வது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. நிறைய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதன் மூலம், இன் றைய சட்டவிரோத சக்திகளை கட்டுப்படுத்த முடியவே முடி யாது. சட்டத்திற்கு உட்படாத நீதியை நிலை நிறுத்துவதின் மூலமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதை சமூ கமும், சர்க்காரும் உணரவேண்டும். குற்றமற்றவர் தண்டிக்கப்பட ஆரம்பித்தவுடன் 'சிறைச்சாலை என்ன செய்யும்?" என்ற கேள்வி எழ 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/41&oldid=1735780" இலிருந்து மீள்விக்கப்பட்டது