உபதேசம்
டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து ரணமும் சீழுமான பகுதியைத் துடைத்துத் தொட்டியில் போட்டார். "நர்ஸ், ஊசி" என்றார். பக்கத்தில் ஸ்டெரிலைஸ் செய்த ஊசியை நர்ஸ் கொடுக்க, டாக்டர் கை மடமடவென்று சக்கிலியத் தையல் போட ஆரம்பித்தது.
கிளாஸ் மேஜையில் கிடத்தப்பட்டிருக்கிற வியாதியஸ்தன் சிறிது முனகினான்; பிரக்ஞை வருவதின் முன்னணி சமிக்ஞை!
"டாக்டர் வில்க்கின்ஸன், இன்னும் கொஞ்சம் குளோரபாரம்... ஒரு நிமிஷம் போதும்... ஹும் வெற்றிதான், என்று நினைக்கிறேன்" என்று பேசினில் ஊசியைப் போட்டுவிட்டு, கை உறைகளையும் முக மூடியையும் கழற்றி விட்டுக் கைகழுவ பேசினிடம் சென்றார் விசுவநாதன். "வியாதியஸ்தனுக்கு பிரக்ஞை வந்துவிட்டது; ஆனால், அளவு கடந்த முயற்சி. ஒரு மணி நேரம் கழித்துக் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுங்கள்..." என்று சொல்லிக் கொண்டே வாயில் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு, டாக்டர் வில்க்கின்ஸன் தொடர இறங்கி நடந்தார். இவரது நரைத் தலையில் சூரிய ஒளிப் பிரகாசம் விழுந்தது. இவர் முகத்திற்கு ஒரு விபரீதமான தேஜஸைக் கொடுத்தது.
விசுவநாத்துக்கு பல மேல்நாட்டுச் சர்வகலா சாலைகளின் பட்டம். நிறபேதம் பாராட்டும் பிரிட்டிஷ் வைத்தியக் கௌன்ஸில் இந்திய வைத்தியக் கௌன்சில்கள் இவரது அபாரமான கற்பனை முறைகளைக் கண்டு பிரமிக்கும். ரண சிகிச்சை என்றால் டாக்டர் விசுவநாத் என்று அர்த்தம். சென்னை வாசிகள் அகராதிக்கு மட்டுமல்ல. யூகோஸ்லாவிய இளவரசருக்கு வந்த விசித்திரமான வீக்கத்திற்குச் சிகிச்சை செய்த நிபுணர்களில் இவரும் ஒருவர். மண்டையில் வீக்கம். மற்றவர்கள் கத்தி எடுத்தால் பிராணஹானி ஏற்படுமோ என்று பயப்பட்டார்கள். ஏனென்றால், ஆப்பரேஷன் வெற்றியடைவது
444
உபதேசம்