இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காட்சி 8
இடம்:—மாளிகைக் கூடம்.
இருப்போர்:—சிங்காரவேலர்.
நிலைமை:—சிங்காரவேலர் கணக்குப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்பிவைத்த ஆசாமி வருகிறான். தலையைச் சொரிந்தபடி நிற்கிறான். அவனைக் கண்டதும் போன காரியம் முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறார். வெறுப்பும் அலட்சியமும் கலந்த குரலில்சி: சரி....சரி.....போ!....போ!....கையாலாகாதவன்.....
[வேலையாளைப் பார்த்து]
காரை எடுக்கச் சொல்லு—பழசு—போர்டு....
[ஆசாமியைப் போகச் சொல்லி கையை அசைக்கிறார். அவன் கவலையுடன் செல்லுகிறான்.]
காட்சி 9
இடம்:—நாடியா வீடு.
இருப்போர்:—நாடியா, சிங்காரவேலர்.
நிலைமை:—சிங்காரவேலர், ஒரு பழய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். எதிர்புறம் நின்று கொண்டிருக்கிறாள் நாடியா. அவள் பார்வையில் வெறுப்பும் அலட்சியமும் கலந்திருக்கிறது. நாடியா நின்றுகொண்டிருக்கும் போக்கு, சிங்காரவேலரை எழுந்து போகலாம் என்று எடுத்துக் கூறுவதுபோலிருக்கிறது. அவள் போக்கைக் கண்டு சிங்காரவேலர் கோபமோ வெறுப்போ கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அங்கு தெரிந்த ஏழ்மைக் கோலத்தைக் கண்டு பரிதாப உணர்ச்சிக் கொண்டவர் போலாகிறார். நின்றுகொண்டிருக்கும் நாடியாவைப் பரிவுடன் பார்த்தபடி....348