உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 யாகக்கொண்டு, சைவசமய அமைப்பை உண்டாக்கி, அதன் மூலம் வடவர் கொள்கைகள் பல புகுத்தப்படு வதைக கண்டு, நீக்கித் அந்த மூடக்கொள்கைகளை தூய்மை செய்யும் வகையில், திருமூலர் திருமந்திரம் தோன்றியுள்ளது. அதுவேயுமன்றி, தமிழ் நாட்டில் தோன்றிய சித்தர் கள் பலரும், வடவர் கொள்கைகளை, உண்மை உணராத தமிழர் ஏற்பதை விலக்க, முயற்சி செய்துள்ளனர். அவர்கள்,தாம் சிந்தித்துக் கண்ட முடிவுகள் பலவற்றை பாடல்களின் மூலம் மயக்க அறிவினார்க்கு எடுத்துக் கூறியுள்ளனர். மூடநம்பிக்கைகளையும், பொரு எற்ற செயல்களையும் கண்டிக்கும் அவரது அறிவுரைப் பாடல்களே அதற்குச் சான்றாவன. யும் தமது பின்னர், இடைக் காலத்தில் கோவில் வழிபாட்டில் வடமொழி தேவபாடையாய் ஆட்சி செய்யத் தொடங்கிய காலத்து அடியார்கள் -நாயன்மார்களும் ஆழ்வார்களும் -தமிழர்களின் தனிக்கொள்கைகளைக் காவாதுவிடினும், தமிழிலே பக்திச் சுவைமிக்க பாடல்களை ஏராளமாகப் பாடி னர். அப்பாடல்களுங்கூட, தில்லையில் ஒரு சிற்றரையில் மறைத்து மூடப்பட்டுக்கிடந்தன. முதலாம் இராசராசன் என்ற சோழ மன்னன் அவற்றை வெளிப்படுத்த முயற் சித்தனன். அர்ச்சகமரபு தமது தொழில் மேன்மைக்குத் துணையாகும் சமஸ்கிருதப் பற்றால், அவை வெளிப்படு வதையும் தடுக்க, வஞ்சகமாக இச்சகம் பேசிற்று. அரச னது சூழ்ச்சி அதனை வென்றது. செல்லரித்தவை போக மீதமுள்ள பாடல்கள் வெளிப்பட்டன. மக்களிடையேயும் வழக்குப் பெறலாயின. சமயச் சார்பில், கதைகளுக்கும். கற்பனை புராணங் களுக்கும் செல்வாக்குத் தோனறியது. அதனால் வட மொழியிலே உள்ள கதைகள் பலவும் தமிழகத்திலே மதிப்புப் பெறலாயின. அதன் மூலம் வடமொழி யின் செல்வாக்கு மேலும் வளருமெனக் கருதினர். எனவே தமிழ் மொழியில் அப்படிப்பட்ட கதைகளை (காவி யங்களை) இயற்றத் தொடங்கினார்கள் புலவர்கள். அவை