36 கத்தின் அடக்குமுறைகள் தாண்டவமாடின. போலீசு, தனது முழுபலத்தையும் செலவழித்தது. எனினும் அறப்போர் மங்கவில்லை, மறையவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அப்போரில் சிறை புகுந்தனர். தியாகச் செம்மல்களுக்கு, "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" என்ற புரட்சிக் கவிஞரின் புத்துணர்ச்சி நல்கும் அடிகளே, சிறைக்குள்ளேயும் கொடுமை மறக்கச் செய்யும் குளிகை யாயிற்று. தலைவர் ஈ. வே. ரா. வெப்பம் மிகுந்த பெல் லாரி சிறையில் அடைக்கப்பட்டார். அண்ணாவும், அடி களும் ம் மற்றும் பல தமிழறிஞர்களும் சிறைப்பட்டனர். வீரத் தாயும் சேயுங்கூடச் சிறைப்பட்டனர் எனில், அந்த உணர்ச்சிக்கு வேறென்ன சான்று வேண்டும்! வீரம், தியாகம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று அனைத்தும் நாளும் வீறிட்டெழலாயின. னை அத்தகைய அறப்போர் வெற்றி பெறுமுன் வீர இளைஞர் இருவரை இழக்கும் தாங்கொணாத் துயரம் விளைந்தது தமிழ் அன்னைக்கு. தமிழ் அன்னையின் கைக ளுக்கு விலங்குகளோ, வாழ்வுக்குப் பகையோ, உயிருக்கும் வாதையோ,என்று அலறிக் குமிறிக் கொதித்து, தமது கைகளில் விலங்கேற்று வாழ்வுக்குப் பகையான சிறைக் கோட்டம் புகுந்து, தமது உயிரையும் வழங்கினர், அன் யின் உயிர்வாதையைக் காணப்பொறாத இரு கண்மணிக ளான தாளமுத்து-நடராஜன் என்னும் வீரத் தியாகிகள். தாயின் உயிர்காக்கத் தம்முயிர் தந்தனர் அந்த உத்தமர் கள். உயிருடன் உலவி, உணர்ச்சியுடன் உரிமை காக்க முன்னின்ற வீரர்கள், உயிரினைத் தமிழுக் களித்து, உணர்ச்சியினைத் தமிழருக்கு ஊட்டி, உயிர் நீத்த உடலினை ஆச்சாரியாரின் வெட்டி ஆட்சிக்குப் பரிசாக் கிப் பிரிந்தனர். தமிழகம் இரத்தக் கண்ணீர் வடித்தது. அக் கண்ணீரில் ஆட்சிப்பீடத்தின்செல்வாக்கு கரையலாயிற்று. 66 உரையாடி, ஆண்டால் நாங்கள் ஆளுவோம், இல்லையேல் வெள்ளையன் தான் ஆளுவான்" என்பது போன்ற மமதை கொண்ட பேச்சில் ஈடுபட்டிருந்த ஆச்சாரியார், தமது
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/37
Appearance