உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 டில் தேனுமாக உள்ளவர்களின் உறவினாலேயே, தமிழர் கள் தாங்கள் இழந்து விட்ட ஒவ்வொரு சிறு உரிமைக்குங் கூடக் கிளர்ச்சி செய்தாக வேண்டிய கெடுநிலைக்கு ஆளா கிக் கிடக்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் புலமை எய்த விரும்பிப் படிப்பதற்குக் கூட சமஸ்கிருதம் கட் டாயப் படுத்தப்பட்டிருந்தது சில ஆண்டுகட்கு முன். தமிழுக்கு அமைக்கப்பட்டிருந்த அந்தத் தடைக் கல்லை, தமது விடாமுயற்சியால் தகர்த்தெறிந்த பெருமை, தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாய முதலியார் அவர்கட்கே உரிய தாகும். இல்லையேல் தனித்தமிழ் படித்தவர்கள் தொகை இந்த அளவு பெருகி இருக்க முடியாது! தமிழ்ப் பற்றும் தழைத்திருக்காது! மேலும், தனித்தமிழ் நடை, மறைமலை அடிகளாரின் கொள்கையால் ஆக்கம் பெற்றுத் தழைத்தது. தமிழ்ப் பேராசிரியர்களான, மறைமலை அடிகளாரும், பரிதிமாற் கலைஞரும், தமது வடமொழிப் பெயர்களை நீக்கித் தமிழ்ப் பெயர் கொண்டமையால் தோன்றிய நல்லுணர்ச்சி, தமி மக்கள் தங்கள் பெயரைத் தனித்தமிழில் அமைத்துக் கொள்ளவும், வடமொழியில் அமைந்திருப்பின் மாற்றிக் கொள்ளவும் தூண்டுகோலாயிற்று. தனித்தமிழ் இயக்கம் வளரத் தொடங்கியது. அவ்வியக்கத்தையும், மொழி வளர்ச்சியின் பெயராலும், பார்ப்பனர் பேச்சு நடையான கொச்சை மொழியையே கைக்கொண்டு தமிழ் மொழி யையே அக்ரகார ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் மறு மலர்ச்சி நடையின் பெயராலும், எதிர்த்தனர் பலர். இன்றும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மொழி தனித்து வளர முடியாது எனற வரட்டு வாதத்தை அவர்கள் கூறிக்கொண்டுதான் வருகிறார்கள் ! 6 மற்றும் தமிழ் மொழியின் இயல், இசைத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி நாடகத் துறையிலும் விளைந் தது. நாட்டில் நிகழும் நாடகங்கள் எல்லாம், பெரும்பாலும், பழங்கதைகளாகவே இருந்தன. புராணப் ஏதேனும் ஓரிரு நாடகங்களே சமூகச் சித்திரங்களாகக் காணப்படும்.