உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கொலைக்கு ஆளாயினர். என்றாலும் இயக்கம் தேயவில்லை, மாறாக வளர்ந்தது, வளருகிறது. தியாகம் வீண்போகுமா? அச்சமயத்தில், திராவிடக் கழகம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை, வடநாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு மறியலாக நடத்தலாயிற்று. ஏனோ, அம்மறியல் பின்னர் நிறுத்தப் பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய ஆட்சிப் பீடத்தினின்றும் வலம்வருகின்ற அமைச்சர்கட்கெல்லாம், வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு. அடையாள மாகக் கருப்புக்கொடி காட்டத் தீர்மானித்தது. அவ்வாறே, திவாகர் திகைக்க, மேதாப் மலைக்க, ஆச்சாரியார் கலங்க, கருப்புக்கொடி எழுந்தது, வளர்ந்தது. இந்தி ஏகாதிபத்தி யத்தை எப்படியும் அழித்தே தீருவோம் என்பதற்கு அடையாளமாக, ரயில்வே நிலையப் பெயர்ப் பலகைகளின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்திப் பெயரை அழிக்கும் கிளர்ச்சி தொடங்கப்பட்டது. அக்கிளர்ச்சி, ரயில்வே பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை மட்டுமன்றி, அஞ்சல் நிலையங்களில் உள்ள இந்தியையும் அழிக்குமள வுக்கு வெற்றிபெற்றது. டில்லி ஆதிக்கத்தின் முகத்தில் 'தார்' பூசப்பட்டது. மற்றும், வகுப்புரிமை நீதி, (கம்யூனல் ஜி. ஓ.) சில வன்னெஞ்சரின் சூதுமதியால் அரசியல் நிர்ணயச் சட்டத் தின மூலம் வீழ்த்தப்பட்டபோது, அக்கொடுமையை எதிர்த்து நிகழ்ந்த பெருங்கிளர்ச்சியில் தி. மு. கழகமே முன்னின்றது. பள்ளி இறுதி வகுப்பில் வடிகட்டும் முறையைப் புகுத்தியபோதும், அது பிற்பட்ட வகுப்பா ருக்குச் செய்யப்படும் அநீதி என்பதை மாணவர்கள் கிளர்ச்சி மூலம் எடுத்துக் காட்டியது. எனறு கைத்தறி நெசவாளர் கண்ணீர் மாற்ற, ஒவ்வொரு திராவிடனும் கைத்தறி ஆடையே கட்டுதல் வேண்டும் கேட்டுக்கொண்டதோடு, கடந்த ஜனவரி 4-ல், ஊர்கள் தோறும், தெருத் தெருவாகக் கைத்தறித் துணி விற்பனை நடத்தி, கைத்தறிக்கே ஆதரவு பெருக்கினர் தி. மு.க. தலைவர்கள். தஞ்சை, திருச்சி மாவட்டங்கள் புயலுக்கு இறை யாகியதால், விளைந்த தாங்கொணாத் துயரத்தைக்