53 குறைக்க, அரிய முயற்சி செய்து நிதி திரட்டி, ரூபாய் இருபத்தி ஐயாயிரத்துக்குக் கைத்தறித் துணியாக வாங்கி, அரசாங்கத்தின் மூலமே ஏழை மக்களுக்கு வழங்கச் செய்தனர். இவ்வாறு, இன உரிமைக்கும், மொழிப் பாதுகாப்புக் கும் எனத்தோன்றிய கிளர்ச்சி வளர்ந்து, அந்த உணர்ச்சி ஓர் உருப்பெற்று, தி.மு.க. என்ற அமைப்பாக நிலைத்து நாட்டுக்குத் தேவையான நற்றொண்டுகள் ஆற்றி வந்துள்ளது. அவைகட்கெல்லாம் பலவற்றை முடி வைத்ததுபோல், முன் னேற்றக் கழகத்தின் முழுவலிவுக்கும் அடையாளமாக அமைந்ததே ஜூலை 15-ஆம் நாள். புதிய ஆரம்பக் கல்வித் திட்டம், பிற்பட்ட வகுப்பு மக்களுக்குப் பெருந்தீமையாகும். எனவே, புதுமுறை யைக் கைவிடவும் என்று கேட்டுப் பார்த்தும் பயனின்மை யால் விளைந்தது அக்கிளர்ச்சி. தமிழரின் உரிமையை அவமதித்து, அவர் தம் என்று குறிப்பிட்டது அறப்போரை -' நான்சென்ஸ்' தவறு என்பதை உணரச்செய்வதற்காகத் தோன்றியது அக்கிளர்ச்சி. வடநாட்டுப் பண முதலாளியின் பெயர்-எழில்மிக்க தமிழ் நாட்டின் அவமானச் சின்னமாக இருப்பது கூடாது என்பதால் பெருகியது அக்கிளர்ச்சி. நாள் குறிப்பிடப்பட்டது. அண்ணாவின் ஆணை பிறந் தது. தளபதிகள் முன்னின்றனர். ஆயிரமாயிரம் வீரர்கள் அணிவகுப்பாயினர். அறப்போர் அறப்போர் என்ற முழக்கம் வானளாவியது. ரயில் நின்றது. துப்பாக்கிகள் முழங்கின. அறுவர் பிண மாயினர். பலர் படுகாய முற்ற னர். தலைவர்களை விழுங்கிய சிறைப்பேய் வாய் திறந்த படியே - மற்றும் பல்லாயிரவரை விழுங்கியது. வழக்கு கள் வளர்ந்தன. நீதி-தண்டனையை விதித்தபடி இருந் தது, இருக்கிறது. உரிமைக்குரல் தண்டிக்கப்படு கிறது. என்றாலும் ஒடுங்கவில்லை. -
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/54
Appearance