vi திராவிடம் தேய்கிறது-எல்லா வழிகளிலும், வாழ்ந்த இனம் வீழ்ந்துகிடக்கிறது, சிங்கத்தின் குகை. சிறு நரிகளின் உல்லாசக்கூடமாகிக் கிடக்கிறது. சனாதன சர்ப்பங்கள், சந்தர்ப்ப அரசியல் வாதிகள், வடநாட்டு வணிகக் கழுகுகள், மூட நம்பிக்கை மேகங் கள்- திராவிடத்தின் எழிலை சிதைத்து சின்னாபின்ன மாக்கி வருகின்றன. சுருங்கச் சொன்னால், இன்றைய திராவிடம்-எத்தர் களின் இன்பமடமாகிக் கிடக்கிறது. நாட்டுக்குறியவன் வதைகிறான். பழங்குடி மகன் பதை, பதைத்துச் சாகிறான். அவனது பழைமை பொருந்திய தாய்மொழி" தங்க இடம் தேடவேண்டிய பரிதாப நிலைக்கு வந்துவிட்டது. வலியோன், எளியோனை விரட்டுவதும்-வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை வளர்வதும், தடுக்க படாவிடில் வாழப் பிறந்த மனித சமுதாயம் வளர்பிறை யாகாது. அவர்கள் வாழ்வு அமாவாசை'யாகி விடும். . திராவிட நாடு கோரிக்கை வீண் பேச்சல்ல : விடுதலை பெறத் துடிக்கும் இளமையுள்ளங்களின் உரிமை முரசு. அதுபற்றிப் பேச, எழுத, ஆராய்ந்து கூற பல படை'கள் திராவிட இயக்கச் சார்பிலே தினசரி நாடெங் கும் பவனி வந்துகொண்டே உள்ளன.
பக்கம்:இதயகீதம்.pdf/6
Appearance