உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது அரசியல் 25 சென் று, கமது மாடப்புறாவை-சுதந்திர உரிமையை- நாம் பெறுவோம், என்பதிலே திடமான நம்பிக்கையும் உறுதியும் நமது இதயத்தில் இருக்கிறது. புது அரசியலமைப்பு நமக்குப் பிடிக்கவில்லை : ஐயப் பிரகாஷ், சரத்சந்திர போஸ் போன்ற முற்போக்கு எண்ணங் கொண்டவர்களும், இதே கருத்தை வெளி யிட்டுள்ளனர். ' எங்களது கட்சி, அதிகாரம் பெற்றால் இந்த அரசியலமைப்பை அகற்றுவோம்' என்றும் அவர் கள் முழக்கமிட்டிருக்கின்றனர். ஏக கட்சியால், தன்னிஷ்டத்திற்கேற்ப உருவாகி இருக்கும் அரசியல் திட்டம், நமக்கு ஓர் அடிமை சாசனம்; நம் நாட்டு வாழ்வைச் சூரையாடும் சூது வலை! இதிலே எந்தவித எண்ணபேதமும் இல்லை - இதுபோல வே இந்நாட்டு முன்னணிக்கட்சிகள் இந்த அரசியல் மைப்புபற்றி தங்களது கண்டன அலைகளைத் தெரிவித் திருக்கின்றன. ஆனால் கண்டனமும், அதிருப்தியும் காலங்கடந்த தாகிவிட்டது. அரசியலமைப்பைத் தயார் செய்து முடிப்பதற்குள் மூன்று ஆண்டுகள், முப்பத்தைந்து மாதங்கள். இருந்தன. இந்த இடைக்காலத்தை இந் நாட்டு முற்போக்குக் கட்சிகளான சோஷலிஸ்டுக் கட்சி, போஸ் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி ஆகிய எல்லாக் கட்சி களும் வீணாக்கி விட்டன. ஐக்கிய முன்னணியுடன் அரசியலமைப்பு பற்றிய அதிருப்தியை, ஒழுங்கான ரீதி யில் எழுப்பவில்லை, இந்த வேதனை நிலைக்கு நாமும் உள்ளாகியிருக்கிறோம். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/32&oldid=1740329" இலிருந்து மீள்விக்கப்பட்டது