34 இதய கீதம் புது அரசியல் மூலம், மாகாணங்களுடைய அதிகா ரங்கள் "டெல்லி "யில் கொண்டுபோய்க் குவிக்கப்பட் டிருப்பது-ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ளவர்களை ஆத்திரமயமாக ஆக்கியிருக்கிறது. மாகாணத்துக்கு கிடைக்கக்கூடிய வருமான இனங்கள், மத்திய சர்க்கா ருக்குக் கொண்டுபோகப் பட்டிருக்கின்றன. குடியரசின் தலைவராக வருபவர், நினைத்தபோது, மாகாணங்களின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடும் அளவுக்கு மாகாணத் தின் சுதந்திரம் பறிபோயிருக்கிறது. மாகாணங்கள்- மத்திய சர்க்கார் இரண்டு இடத்திலும், ஆட்சி மேடை யில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே கட்சியினர் - காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், இரண்டு இடத்துக்குமிடையே சச்சரவும், குமுறலும் ஏற்பட்டு விட்டன : வளர்ந்துகொண்டிருக்கின்றன. கோபால் ரெட்டி முதல் கோபிசந்த் பர்கவா வரை யில் குமுறும் எரிமலையாகத்தானிருக்கின்றனர். இந்த நிலை ஏற்படாமல் தடுக்கமுடியாது, காரணம் அதிகா ரத்தை அனுபவித்தவர்களிடமிருந்து பறித்து எடுத்தால், அவர்கட்கு ஆத்திரம் வரத்தான் செய்யும். அந்தக்காட்சி இரண்டரை ஆண்டு சுதந்திரத்தில், வெகுவேகமாக, அடிக்கடி நடைபெற்று வந்திருக்கிறது. புது அரசிய லமைப்பு மூலம் மாகாணம்-மத்திய சர்க்கார் இரண்டு இடத்துக்குமுள்ள பிளவும் பேதமும், குமுறலும் கொந் தளிப்பும், வளரச் செய்ய வழியிருக்கிறதேயொழிய, மங்கிவிடப்போவதில்லை!
பக்கம்:இதயகீதம்.pdf/41
Appearance