பிரிவினை கீதம் 43 பொருள் உற்பத்தி செய்தால், அவைகள் விற்கப் படவேண்டும். விற்றால்தான், பணம் கிடைக்கும். வாங் கும் இடம் இல்லையென்றால் பொருளை உற்பத்தி செய் தோர் பணத்தைக் காண முடியாது. (60) எனவே, வடநாட்டு முதலாளித்துவம் தென் ட்டை-திராவிடத்தை-தனது சரக்குகள் விற்கப் படும் சந்தையாக வைக்க விரும்புகிறது. வடநாட்டு ஆலைகள் குவிக்கும் சரக்குகள் எந்த வெளி நாட்டிலும் விலை போகாது. ஆனால், தென்னாடு முன்னேறாத கார ணத்தால், வடநாட்டு நவீன உற்பத்திப் பொருள்களை வாங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலை நீடிக்கவேண்டுமென வட நாட்டு முதலாளிமார் விரும்புகின்றனர் தங்கள் சுரண் டல் நீடிப்பதற்காக. அவர்கள் ஆசையை நிறைவேற்றித்தரும் வகையி லேயே வடநாட்டுத் தலைவர்களைக் கொண்ட காங்கிரஸ், நடந்து வருகிறது- அதற்கான சட்டங்களையும் தயாரித் துக்கொண்டு விட்டது, புதிய இந்திய அரசியலமைப்பு மூலம். எனவே, தென்னாடு ஒரு சிறந்த தொழில் வளம் செறிந்த நாடாக ஆகமுடியாது. ஆவதற்கான சூழ்நிலை களும் தென்படவில்லை! K சுருக்கிச் சொன்னால் வடநாடு இங்கிலாந்து ஆகிறது ! நாம் அடிமை இந்தியா' ஆகிக்கொண்டிருக் கிறோம்.
பக்கம்:இதயகீதம்.pdf/50
Appearance