பிரிவினை கீதம் 47 இருந்தும், இவ்வளவு பெரிய பிரச்னைகளில் ஒன்றுக் கொன்று நேர் எதிரிடையாக நடந்துகொண்டிருக் கின்றன. "ஐக்கியம் என்று பேசுகிறீர்கள் - இந்தியாவி லுள்ள எல்லாப் பிரதேசங்களும் ஒரே மனப்பண்போடு டக்கவேண்டும் என்று கர்ச்சிக்கிறீர்கள்! ஆனால் அது நடக்குமா? நடைமுறையில் தான் வரக்கூடியதா? அவரவரும் தத்தமது சுயலாபங்களில்தானே நாட்டங் கொண்டிருப்பர்” என்று நாம் சொன்னால் நம்பாத நண் பர்கள். பலருண்டு நம்மிடையே. அவர்கள் தெளிவு பெறும் வகையிலும், சம்பவங்கள் நடைபெற்று வரு கின்றன. பிரம்மபுத்திரா நதித்தீரத்துலவுபவரும், கங்கை யின் மழலையில் மகிழ்பவரும், துங்கபத்திரைக் கரை யில் துள்ளித்திரிபவரும், காவிரித் தண்ணீரைப்பருகு பவரும், இமயமுதல் குமரிவரை எல்லோரும் இந்திய மக்கள்! இந்நாட்டுச் சகோதரர்கள்!! என்று கூவி, முழக்குகின்றனர். இந்தக் கூச்சல் காதுக்கு இனிப்பு-கருத்துக்குக் கசப்பு என்று நாம் சொன்னால், கெக்கலிப்பர்! ஆனால், அகில இந்தீயம் பேசுவது ஒரு போதும் உண்மையாகி விட முடியாது என்பதை, கீழ்க்கண்ட சம்பவங்கள் தெளிவாக்கும். சென்னை மாகாணத்தை வட காட்டு மாகாணங்கள், தொழில் துறையில்மட்டுமின்றி, ஏனைய துறைகளிலும் எத்திப் பிழைக்கும் வழிகள் எத்துணை
பக்கம்:இதயகீதம்.pdf/54
Appearance