உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3593

கலையும் வாழ்வும் கலையென்று சொல்லிய அளவாலேயே, அது நிலையாலே உயர்ந்ததென்றும், எளிய மக்களுக்கு விளங்காதென்றும் எண்ணுவோர் பலர். அதைப்போலவே வாழ்க்கை யென்று சொல்லிய உடனேயே, அது துன்பக் கொள்கலம் என்றும், பிறந்தோர் உறுவது பெரும் பெருந் துன்பம் என்றும் தீப் பிணி இருக்கை யென்றும், கருதுவோரும், கருதாவிடினும் பேசுவோரும் பலர். இந்நிலையில், கலையைப்பற்றி நாம் உணர் வேண்டுவதோடு, வாழ்க்கையை கேருக்கு நேர் பார்க்கவேண் டியவர்களாகவும் கலைக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்ச்சி யையும் அதன் விளைவையும், ஆழ்ந்து நோக்கி சிந்திக்க வேண் டியவர்களாகவும் இருக்கிறோம். கலை என்றால் என்ன ? கலையென்றால், கண்ணுக்கினி யது, செவிக்கினியது, புலனுணர்வுக்கும் பொறி நுகர்ச்சிக் கும் இன்பம் பயப்பது, மனத்துக்கும் கருத்துக்கும் கவர்ச்சி யளிப்பது என்றே எவரும் கூறுவர். கலை இனிமையுடையது தான், இன்ப உணர்வை எழுப்புவதெல்லாம் ஏறத்தாழ கலையென்றே சொல்லப்படுகின்றன. ஆனால் கலையிடம் இனிமைமட்டுமே காணப்படவில்லை, அதன் விளைவும். நிகழ்ந்துகொண்டே யிருக்கிறது. அந்த விளைவு நன்மை யாகவும் இருக்கலாம். தீமையாகவும் மையாகவும் இருக்கலாம். அறிவை வளர்க்கவும் செய்யலாம், அழிக்கவும் செய்யலாம். வீரத் தனத்தையும் விளைக்கலாம், கோழைத் தனத்தையும் வளர்க் கலாம். சர்க்கரை, நாவிற்கு, நல்ல சுவைதான். ஆனால் உட லுக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல, சில சமயங்களில் பெருந் தீமையையும் விளைவிப்பதைக் காணலாம். அதைப் போலத்தான் கலையும் சுவையுடையதுதான். ஆனால் விளைவோ, அதன் நிலைக்கும் வகைக்கும் ஏற்றாற்போல் நல்ல தாகவும் இருக்கலாம், தீயதாகவும் அமையலாம்.