6 கலை அழகுடையது உயிர்க்கலை; கொல்வது கூடாது என்பது முனிவரின் எண்ணம். அதை அவர் கூறினார். ஆனால் வேடன் பதிலளிக்கவில்லை. திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையிலேயே பதில் இருந்தது. இதுவன்றி என் வயிற்றுக்கு வேறென்ன வழி ? என்பதே அவனுடைய பதில். முனிவர்கள் கந்தமூலங்களை உண்டு காலத்தைக் கடத்தலாம் ஆனால் காலத்தோடு போராடும் ஓர் சமுதாயத்தைக் கூட்டத் தைச் சேர்ந்தவன் கந்தமூலங்களை உண்டு காலங்கடத்த முடியுமா? அவன் அளித்த பதிலுக்கு யாரே மறுத்துப் பேச இயலும். கலை மானானாலும்,கலையேயா னாலும், அதனால் ஒருவ ருக்கு அவர் நிலைமையில் ஏற்படும் கருத்து மற்றொருவ ருக்கு அவர் நிலைமையில் ஏற்படும் என்று கருதமுடியாது. வேடனின் வாழ்க்கை உண்மை, உயிர் வளர்க்கும் உணவு 'கலைமான் ' என்ற உண்மை, முனிவரின் அழகுக் கற்பனை யை உணர்த்தும் "கலைமான் என்ற உண்மையை வெல்லக் கூடிய உண்மையுடைய தன்றோ! ஒரு பசுமையான வயல்- பயிரின் கொழுமையும் செழு மையும் பச்சைக் கம்பளத்தை நிலமகள் போர்த்திக் கொண் டிருப்பது போலத் தோன்றுகிறது. அதன் வரப்பிலே ஓச் வெள்ளுடை இளைஞன் நிற்கின்றான். அவன் அதன் பசு மைக் காட்சியையும், குளிர்ந்த காற்று வீசுகின்றபோது, பயிர் மேலுங் கீழுமாய் அசையுங்காலை, அதனிடத்துக் காணும் ஒழுங்கையும், முற்றியுள்ள கதிர்கள், பச்சைக் கம்ப ளத்தில் மஞ்சள் பட்டு நூலால் பூவேலை செய்யப்பட் டிருப் பது போலக் காட்சி யளிப்பதையும் கண்டு மகிழ்கின்றான். அவனுடைய கலையுள்ளம் அதனைப் பருகிக்கொண் டிருக் கிறது. அவ்வேளை, படபடவென்ற ஒலி கேட்கின்றது. ஒரு புறாக் கூட்டம் அந்தப் பயிரினிடத்தே இறங்குகின்றன. கதிர்களைக் கொத்துகின்றன. இளைஞனோ, அந்த அழகிய மஞ்சட்பட்டு நூல் வேலையை - பச்சைக் கம்பளத்தில்,வெள் ளிய முத்துக்கள் தூவியதெனத் தோன்றும் அக்காட்சியைக்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/12
Appearance