11 கூ உதாரணமாக, காவியமும் ஓவியமும், சிற்பமும் இத் தகைய கலைகளாம். இவை அழகுணர்ச்சி அளிப்பன. ஆனால் அழகுணர்ச்சி அளிப்பன மட்டுமே கலையென்று கூறி முடியுமா? மனிதனின், அறிவின் உழைப்பால், ஆராய்ச் சியால் காணப்படும் புதுமைகள் யாவும் கலைகளே. மனித உள்ளம் ஏதோ ஒன்றினை எண்ணி எண்ணி, உண்மையாக்கி அதனை விடுமேயானால் அது ஓர் கலையாகிறது. ஆகவே, மனித உள்ளத்தின் திருப்தி, குறை நீக்கம், இன்ப உணர்ச்சி என்பவை தோன்றக் காரணமாவதைக் கலையென்று கூறலாம். மனிதனிடத்தில் தோன்றும் புதுமையுணர்ச்சியே கலையுணர்ச்சி. புதுமை உணர்ச்சி வளரக் காரணமாயிருப் பதே கலை புதுமை உணர்ச்சி, வளர்ச்சியின் விளைவு. வளர்ச்சி யுடையதெல்லாம் உயிருடையன. எனவே கலையும் உயிர்ப் பண்புடையது, வளர்ச்சியுடையது. நுண்கலை கலையை,உணர்வுக்கலை யென்றும், பொருட்கலையென் றும் பிரிக்கலாம். உணர்வுக்கலையை நுண்கலையென்றும், பொருட்கலையைப் பயன் கலையென்றும், கூறலாம். யால் மக்கள் மன உணர்வுப் பண்பாடும், பொருட்கலையால் மக்கள் வாழ்வின் பெருக்கமும் நிகழ்கின்றன.இக்கலையை இன்னும் பல பிரிவுகளாக்குவர். ஆனாலும் அவையெல்லாம் இவற்றுள் அடங்குவனவே. ஒரு மனிதன் உள்ளத்துத் தோன்றிய உணர்வு, அப் படியே, காவிய வடிவிலோ, ஓவிய வடிவிலோ வெளிப்பட்டு மற்றோர் மனிதன் உள்ளத்திலே சென்று பதியுமானால் அதுவே உணர்வுக்கலை. ஒரு மனிதன் உள்ளத்திலே தோன் றிய எண்ணம் அப்படியே தொழில் வடிவிலே வெளிப்பட்டு உருவம்பெற்று மற்றோர் மனிதனுக்குப் பயனளிக்குமே யானால் அதுவே பொருட்கலை. இவ்விரண்டு வகையானும் நிறைவடையா தன கலையாவதில்லை. கவிதை எழுதப்பட் டுள்ளதாலேயே கலையாகிவிடாது. அதனிடத்திலுள்ள அழகு உணரப்பட்டு, அவ்வழகுணர்ச்சி மேலும் வளரக் காரண மாவதனாலேயே அது கலையாகிறது. அதில் சிறந்த க கவிதையே
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/17
Appearance