12 உயிர்க்கவிதை, அதைத் தோற்றுவித்தோனே ஒப்பற்ற கலை ஞன்,நிகரற்ற கவி. - அது பொருட் கலை என்ற உடனே, நாற்காலியும், கட்டிட மும் கலைகளா? என்று கேட்கத்தோன்றும். ஒரு நாற்காலி யைப் பார்த்துச் செய்யப்படும் மற்றோர் நாற்காலியோ ஆயி ரக்கணக்கான நாற்காலிகளோ கலையாகாது, தொழில். ஆனால் முதன் முதலில், உட்காருவதற்கு ஏற்ற தாக ஒன்று வேண்டும் என்ற எண்ணத்தால், தோன்றிய நாற்காலி கலையாகும். அதாவது சிந்தனையால் சித்தரிக்கப் பட்டது. கட்டிடமும், புதிது புதிதான அமைப்புக்களுடன் வளர்ந்து கொண்டிருக்கும் தன்மை, கலையாகும். இதுவன்றி யும், நாற்காலியின் காலிலோ கையிலோ செய்யப்பட்டுள்ள அழகு வேலைப்பாடு கலையாகும். அந்த வேலைப் பாட்டைப் பார்க்கும் பிறிதொருவன், அதனை உள்ளத்திலே பதியவைக் கின்றான். மற்றோர் நாற்காலியின் கையமைப்பில் அதைச் செய்வதோடன்றி அதனை மேலும் அழகுடையதாக்கி விடுகிறான். அவ்வாறு, மேலும் அழகுணர்ச்சி வளரக் காரண மாவதனாலேயே அதுவும் கலையாகிறது. இக்கலையின் விளைவு, பெரும் பகுதியும் பயனாகவே இருத்தலின் இது பொருட் கலையாகிறது. 1 ஆகவே, இங்கு காணப்பட்ட உணர்வுக் கலை உள்ளத் தைச் சார்ந்து இடம் பெறுவது, பொருட் கலை அறிவின் துணைகொண்டு அமையும் முயற்சியில் இடம் பெறுவது. உள்ளெண்ணத்தையே வளர்ப்பது நுண் கலை, புறத்தொழி லைப் பெருக்கக் காரணமாவது பயன் கலை. கற்பனையை வளர்ப்பது நுண்கலை. காரணத்தோடு இயைந்த கருத்தை மட்டும் கைக்கொள்வது பயன் கலை. கற்பனை உலகில் சஞ் சரிப்பதால் வாழ்க்கையையே சில சமயங்களில், மறக்கச் செய் வதும், இழக்கச் செய்வதும் உணர்வுக் கலை. உண்மை உல கில் தொழிற்படுவதால், வாழ்க்கையைப் பலவகையிலும் வளப்படுத்துவது பொருட் கலை. ஓவியமும். காவியமும், சிற்பமும் சித்திரமும் உணர்வுக் கலை. வானநூலும், விஞ்
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/18
Appearance