13 ஞானமும், பொருள் நூலும், கணிதமும் பொருட் கலை. என்றாலும், இக்கலைகளின் தன்மையில் விதிவிலக்கும் இல் லாமலில்லை. ஆனால் பெரும்பான்மைப் பண்பை யொட்டியே இவ்வாறு பிரிக்கிறோம். பொருட் கலை, மக்கள் நன்மைக்காகவே வளர்க்கப்படு கிறது. தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் நோக்கம் பொருட் கலையில் காணமுடியாது. ஆனால் உணர்வுக் கலை யின் நோக்கத்தால் வாழ்க்கையே அழிவதையும் நாம் காண முடியும். உணர்வுக் கலை, பொருட் கலையைப் போலன்றி, மனிதனைக் கற்பனை உலகிலே விளையாடச் செய்வதால், அங்கேதான் மனிதன் அதிக ஆராய்ச்சியுடன் கவனிக்க வேண்டியவனாகிறான். ஆற்று வெள்ளம் அழகானது தான் ; அதில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கத்தான் செய்யும். ஆனால் சுழலில் சிக்காமலும், மடுவில் இறங்காமலும் இருப் பது இன்றியமையாத தாகும். அதைப் போலத்தான் உணர் வுக் கலையும் என்று கூற விரும்புகிறேன். ம்ம பொருட் கலையால் அழிவு ஏ ஏற்படவில்லையா ? என்று வினவலாம். பொருட் கலை ஆக்கத்திற்கு மட்டுமன்றி அழி விற்கும் பயன்படுவது உண்மைதான். ஆனால், அது, தம் மைச் சார்ந்தோருக்கு நன்மையும், தம்மை எதிர்ப்போர்க்கு அழிவையும் விளைவிக்கும் நோக்குடனேயே வளர்க்கப்படு கிறது. அப்படித்தான் வளரவும் முடியும். விஞ்ஞானத்தின் விளைவாக அணு குண்டுவே கண்டுபிடிக்கப்பட்டாலும், அத னைக்கண்டுபிடித்தவர்களுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வதே அதன் நோக்கமாகும். அவர்களின் எதிரி களை ஒழிக்கவே அது பயன்படுத்தப்பட்டது. அன்றியும் அணுகுண்டு எல்லோருக்கும் நன்மை செய்யவே என்று கூறினாலும், அணுகுண்டு அழிக்கும் ஆற்றலுடையது என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை, எவரும் மறக்க முடிவதில்லை. ஆனால் உணர்வுக் கலைகளின் விளைவு, பலரால் உணரவே முடிவதில்லை. அவைகளிடத்தில், அழிவு மறைந்து கிடக் கின்றது. மக்கள் எதிர்பாராத நிகழ்ச்சிக்கு, வீழ்ச்சிக்கு இடம் ஏற்படுகின்றது. -
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/19
Appearance