14 . இனி,கலை எப்படித் தோன்றிற்று என்று காண்போம். கலை, நாகரீகத்தின் முதிர்ச்சியின் விளைவு. நாகரிகம் மனித தேவையைப் பூர்த்தி செய்து கொண்டதன் அறிகுறி. மனி தன், உணவும்,உடையும், உறையுளும் தேவை என்பதை உணர்ந்த காலத்திலேயே நாகரிகம் வளரத் தொடங்கிற்று. மனிதன் பச்சை மாமிசத்தை உண்டதினின்று அதைச் சுட் டுத் தின்பதற்குப் பழகியதும், சமைத்துண்ணத் தலைப்பட் டதும்; மர உறியும், தழை உடையும் உடுத்துவதினின்று காருடையும்,பஞ்சுடையும் உடுத்தத் தலைப்பட்டதும்; மரக் கிளையிலும், குகையிலும் குந்தி யிருந்ததினின்று குடிசை யிலும் கூரைக் கட்டிடத்திலும் குடியிருக்கத் தலைப்பட்டதும் நாகரிகத்தின் வளர்ச்சி நெறியாகும். அதுமட்டுமன்றி கூட கோபுரங்களையும் மாட மாளிகைகளையும், ஊர்களையும் நகர் களையும், பாக்கங்களையும் பட்டினங்களையும், அரசையும் அமைச்சையும், காவலையும் வரியையும், வாகனத்தையும் வண்டியையும் அமைத்துக் கொண்ட ஒவ்வொன்றும் நாக ரிக வளர்ச்சியாம். இந்நாகரிக வளர்ச்சியே பல்வேறுபட்ட கலைகளின் அடிப்படையுமாம். இவ் அடிப்படையினின்றும் கிளர்ந்து எழுந்து பரந்து பொலிகின்ற கலையுணர்வே உண வில் அறுசுவை சேர்ப்பதும், உடுத்தலில் அழகுகாண்பதும் உறையுளில் வெலைப்பாடு செய்வதும், கருத்தினைப் பாட் டாக்குவதும் கதையினை இலக்கிய மாக்குவதுமாம். தேவையைப் பூர்த்தி செய்துகொண்ட மனிதன் அவ்வளவில் நிற்றல் இயலாது. ஆகவே தான் திருப்தி அடைந்த புலன் உணர்விலிருந்து பாட்டு பிறக்கின்றது. சிறு குழந்தைக ளுடைய விருப்பம் நிறைவேறிவிட்டால் அந்த எக்களிப்பில் பொருளற்ற பாட்டும் தோன்றும். மாடு மேய்ப்பவன் மாலை யிலே வயிற்றுக்குக் கஞ்சி கிடைத்தாலும் குடித்தவுடன் தன்னான பாட்டைப் பாடுவதைக் கேட்கிறோம். அதைப் போலத்தான் புலன் உணர்ச்சி இன்பமெய்தியவுடன் அது பண்ணுடன் கலந்த பாட்டாகிறது; பாவை வடிவச்சித்திர மாகிறது; சிந்தனைக்கு விருந்தளிக்கும் செந்தமிழ்க் காவிய மாகிறது; நெஞ்சை யள்ளும் பல்வேறு கலையாய்க் கவின் '
பக்கம்:கலையும் வாழ்வும் 1945.pdf/20
Appearance